சொல்லியும் அம்மா கேட்கலை.. அவனும் விடலை.. ஊரடங்கிலும் அடங்கலை.. கட் பண்ணிட்டேன்.. ஷாக் இளைஞர்

சென்னை அருகே இளைஞரை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எவ்வளவோ சொல்லியும் என் அம்மா, அந்த இளைஞரிடம் கள்ள தொடர்பை விடவே இல்லை.. இதனால் நான் ஊரடங்கு நேரத்தில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே போனேன்.. அதை பற்றிகூட கவலைப்படாமல் தொடர்ந்து கள்ள உறவு தொடர்ந்தது.. அதனால்தான் இளைஞரை கொன்று, மர்ம உறுப்பையும் துண்டித்து வீசினேன்" என்று மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.. 30 வயதாகிறது.. ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை அருகே மிக கோரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்... இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

lockdown crime: driver murdered in chennai and three arrested

அப்போது, இது தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.. மலையம்பாக்கம் விமல் 22, பிரேம் 19, அபி 18 ஆகியோர் அந்த 3 பேரும்தான் ரஞ்சித்குமாரை கொன்றது என தெரியவந்தது.. இதையடுத்துஅவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ரஞ்சித்குமாருக்கும், விமலின் அம்மாவுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது.

ஒருநாள் நேரிலேயே அந்த காட்சியை மகன் பார்த்துவிட்டு அதிர்ந்தார்.. அம்மாவை கடுமையாக எச்சரிக்கை செய்து விமல் கண்டித்துள்ளார்.. ஆனாலும் கள்ள தொடர்பு நீடித்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அம்மா இப்படி செய்வதை கண்டு மனம் வெறுத்த விமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. ஆனால் மகன் இப்படி ஊரடங்கு நேரத்தில் எங்கு போவான், என்ன செய்வான் என்பதை கூட கவலைப்படாமல் அந்த தாய் தொடர்ந்து ரஞ்சித்குமாரை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருந்திருக்கிறார்.

இதை கொஞ்சமும் எதிர்பாராத விமல், ரஞ்சித்குமாரை கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். வீட்டில் இருந்த ரஞ்சித்குமாரை செங்கல் சூளைக்கு வரவழைத்து, 3 பேரும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மேலும், ரஞ்சித்குமாரின் மர்ம உறுப்பையும் அறுத்து வீசி எறிந்துள்ளனர்.. இவ்வளவையும் விமல் போலீசில் வாக்குமூலமாக தெரிவித்தார். இதையடுத்து அவர்களை போலீசார் கைது தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+