சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஒன்றிணைவோம் வா.. சிக்கன் சாப்பிடலாம் வா".. இலவச கறி தந்து கலக்கிய திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ!

தொகுதி மக்களுக்கு கோழிக்கறியை திமுக எம்எல்ஏ சரவணன் வழங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலினின் "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ், தொகுதி மக்களுக்கு கோழிக்கறி வழங்கினார் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன்!!!

தமிழகத்தில் கொரோனாவைரஸ் நுழைவதற்கு முன்பிருந்தே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க குரல் கொடுத்தவர்களில் எம்எல்ஏ சரவணனும் ஒருவர்
திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவான இவர், வைரஸ் பரவல் அவ்வளவாக தமிழகத்தில் நுழைவதற்கு முன்பேயே மானிய கோரிக்கை விவாதத்திற்காக சட்டப்பேரவைக்கு மாஸ்க்குடன் வந்து பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்தவர்!!

 lockdown: dmk mla dr saravanan provides chicken

அதுமட்டுமல்ல.. தன் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னின்று விடாமல் கவனித்து வருகிறார்.. அதேசமயம் தொற்று ஏற்பட்டவர்களும் இங்கு உண்டு.. பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகியும் சென்று வருகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் டாக்டர் சரவணன்தான்.. தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ததுடன், விரகனூர், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகள் மொத்தமும் கிருமிநாசினி மருந்தை தெளித்தார். பிறகு டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்தை தெளிக்கும் புது முயற்சியில் இறங்கினார்.. அது மக்களுக்கு முழு பலனை சென்றடைந்தது..

 lockdown: dmk mla dr saravanan provides chicken

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்திய "ஒன்றிணைவோம் வா"என்ற திட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் கோழிக்கறி.
தன்னுடைய தொகுதி மக்களுக்கு இந்த கோழிக்கறியை விநியோகித்து வருகிறார்.. முதல்கட்டமாக மதுரை அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக கோழிக்கறி, அரிசி, பருப்பு,காய்கறிகள் வழங்கி உள்ளிட்ட உணவு பொருட்களையும் வழங்கினார். முகத்தில் மாஸ்க், கவரில் சிக்கன் சகிதம் இந்த உதவிகளை வழங்கி வருவது தொகுதி மக்களுக்கு பெருத்த நன்மையை தந்து வருகிறது!

English summary
lockdown: dmk mla dr saravanan provides chicken and essential things
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X