சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தமாக லாக் செய்யப்பட்ட அண்ணா சாலை.. முக்கிய சாலைகள் மூடல்.. சென்னையில் தீவிர கட்டுப்பாடு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முழு லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அங்கு அண்ணா சாலை உட்பட முக்கியமான சாலைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.

Recommended Video

    மொத்தமாக லாக் செய்யப்பட்ட அண்ணா சாலை.. முக்கிய சாலைகள் மூடல்..

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். இன்று முதல் இங்கு முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Lockdown in Chennai: Major roads like Anna Salai completely locked down in the capital

    சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஊரடங்கிற்கு இடையே முக்கியமான சாலைகள் மூடப்பட்டு உள்ளது. அதன்படி மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அண்ணா சாலை மொத்தமாக மூடப்பட்டுள்ளது. சென்னையின் மற்ற சில சாலைகளும் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.

    சிறு சிறு தெருக்கள் நிறைய மூடப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகம் இருக்கும் ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில்தான் அதிக அளவில் சாலைகளை மூடியுள்ளனர். மக்கள் வெளியே வருவதை மொத்தமாக தடுக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

    பழைய இ-பாஸ் செல்லாது.. பணிக்கு செல்ல அனுமதி சீட்டு அவசியம்.. சென்னையில் வரும் புதிய கட்டுப்பாடு! பழைய இ-பாஸ் செல்லாது.. பணிக்கு செல்ல அனுமதி சீட்டு அவசியம்.. சென்னையில் வரும் புதிய கட்டுப்பாடு!

    ஏற்கனவே கொரோனா லாக்டவுன் முதல் முறை அமலுக்கு வந்த போது ஏப்ரல் மாதத்தில் சென்னையில் அண்ணா சாலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்லும் மக்களுக்கு அபராதம் விதிப்பதற்காக இரண்டு தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Lockdown in Chennai: Major roads like Anna Salai completely locked down in the capital of Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X