சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் தளர்வுகளா.. எதற்கெல்லாம் அனுமதி?.. 27 மாவட்டங்களா?.. முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்பு

லாக்டவுனில் இன்று தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவையெல்லாம் என்ன என்பது குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில், தொற்று பரவலை தடுக்க, கடந்த மாதம் 24ம் தேதி முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால், தொற்று மெல்ல மெல்ல குறைய துவங்கியது... அதைதொடர்ந்து, தமிழ்நாடு அரசு படிப்படியாக மேலும் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

கொடுமை.. தனியாக இருந்த தாத்தாவை.. நிர்வாண படம் எடுத்து மிரட்டிய 3 பெண்கள்.. இப்போ ஜெயிலில்..!கொடுமை.. தனியாக இருந்த தாத்தாவை.. நிர்வாண படம் எடுத்து மிரட்டிய 3 பெண்கள்.. இப்போ ஜெயிலில்..!

அந்த வகையில், இம்மாதம் 14ம் தேதி முதல் கடைகள் திறப்பு உட்பட சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு 21ம் தேதி காலை 6:00 மணிக்கு முடிய உள்ளது.

 பேருந்து

பேருந்து

இப்போதைக்கு கொங்கு பகுதி அதாவது, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், அந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொற்று

தொற்று

அதேசமயம், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இப்போதைக்கு தினசரி பாதிப்பு 9,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது... அதனால், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது... இவ்வளவு நாள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.. அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் வேலையாக பஸ்களை மாவட்டங்களுக்குள் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 ஆலோசனை

ஆலோசனை

இது சம்பந்தமாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.. இதுசம்பந்தமான அறிவிப்பும் இன்று வெளியாகும் என தெரிகிறது. அந்தவகையில், இந்த முறை எதற்கெல்லாம் தளர்வுகள் அளிக்கப்படும், எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்படும் என்ற ஆர்வம் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது.. மேலும் இதுகுறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகி உள்ளது..

 நடவடிக்கை

நடவடிக்கை

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் மாவட்டத்துக்குள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என கூறப்படுகிறது... சிறிய நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்க வாய்ப்புள்ளது... சிறிய வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க வாய்ப்புள்ளது.

 அறிவிப்பு?

அறிவிப்பு?

மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் நிலையில் இம்முறை அதற்கான கால அளவு நீட்டிக்கப்படும் என சொல்லப்படுகிறது.. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் பாதிப்பை கணக்கில் கொண்டு இந்த மாவட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.. எதுவானாலும் இன்று மாலை தெரிந்துவிடும்.

English summary
Lockdown Relaxations are expected to be released today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X