சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 தொகுதிகள் குறி... தமிழகத்தில் அதிரடியாக களமிறங்கும் பாஸ்வானின் லோக் ஜனசக்தி.. மாற்றத்தை தருமா?

Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 10 இடங்களில் போட்டியிடுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரசாரம் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

Lok JanShakti Party releases candidate details for upcoming Tamil assembly election

இந்த முறை திமுக, அதிமுக கூட்டணிகளைத் தாண்டி மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதுதவிர சில கட்சிகள் தாங்கள் வலுவாக உள்ள இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களில் மட்டும் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

அதன்படி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இந்தத் தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடுகிறது. சென்னையில் பல்லாவரத்தில் சத்தியசீலன் என்பவரும் எழும்பூரில் சந்திரகலா என்பவரும் போட்டியிடுகின்றனர். கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஓவியர் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார்.

அதேபோல மணப்பாறை தொகுதியில் வரதனும், திருமங்கலம் தொகுதியில் ஆறுமுகமும், உளுந்தூர்பேட்டையில் தனபாலும் லோக்ஜனசக்தி சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த ஏழு பேருக்கும் பங்களா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தேவப்ரியன் என்பவரும் திருவெறும்பூர் தொகுதியில் பிரியா என்பவரும் லோக் ஜனசக்தி சார்பில் ஜன்னல் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மேலும், திருச்சி மேற்கு தொகுதியில் லோக் ஜனசக்தி வேட்பாளர் கல்பானாவுக்கு அன்னாசி பழம் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

English summary
Lok JanShakti Party contesting in 10 seats in the upcoming Tamil assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X