இப்படி ஒரு முடிவா? தமிழ் இளம் இயக்குனர் லோகேஷ் தற்கொலை! சோகத்தில் 90’ஸ் கிட்ஸ் ரசிகர்கள்!
சென்னை : 90'ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான ஜீ பூம்பா, மர்மதேசம் உள்ளிட்ட தொடர்களில் சிறுவனாக நடித்திருந்தவரும், இளம் இயக்குனருமான லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
1990ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி தொடர்களாக வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் இளம் வயது ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் லோகேஷ்.

மர்ம தேசம் தொடரின் இயக்குனரான நாகா மீது மிகவும் மரியாதை கொண்டவரான அவர் நடிப்பதை விட்டுவிட்டு தற்போது இயக்குனராகும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது இயக்கத்தில் குறும்படங்கள் வெளியான நிலையில் தற்போது பெரிய திரையில் படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த தொடரில் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் சென்னையில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அப்போது அந்த குழுவில் லோகேஷ் ராஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மர்மதேசம் தொடரில் பணிபுரிந்த பலரும் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications