சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிச.,5ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 3 நாள் தமிழ்நாட்டில் மழை.. வானிலை அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் டிசம்பர் 5ல் காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானமழை பெய்ய உள்ளது எனவும், நாளை, நாளைமறுநாள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. செப்டம்பர் இறுதியில் துவங்கிய பருவமழை முதல் 2 வாரங்கள் வெளுத்து வாங்கியது.

அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன? கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன?

காற்றழுத்து தாழ்வு மண்டலம்

காற்றழுத்து தாழ்வு மண்டலம்

இந்நிலையில் தான் தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரம் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி காற்றழுத்து தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும். அதன்பிறகு தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 3 நாள் மழை

இன்று முதல் 3 நாள் மழை

இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ம் தேதி வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகே நிலவலாம். இதனால் தமிழகம் நோக்கி கிழக்கு திசை காற்று வீசுகிறது. இந்த காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை-நாளை மறுநாள் வானிலை

நாளை-நாளை மறுநாள் வானிலை

அதன்படி இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். டிசம்பர் 4ம் தேதியான நாளை தமிழகத்தில் சில இடங்களிலும், டிசம்பர் 5ம் தேதி தென் தமிழகத்தில் சில இடங்களிலும், பிற மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை எப்படி?

சென்னை வானிலை எப்படி?

சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

English summary
A low pressure area is likely to form over the Bay of Bengal on December 5. Meanwhile, the Meteorological Department has said that there will be light rain with thunder and lightning in the coastal districts of Tamil Nadu today, and moderate rain will occur in many districts of Tamil Nadu tomorrow and the day after tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X