தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
சென்னை: தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதற்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையாகும். இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களால் வரவேற்கப்படுகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை
ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை நடந்து வருவதாக கடந்த அதிமுக ஆட்சியிலேயே புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

கட்டணங்கள்
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். நேற்று முன் தினமும் கமல்ஹாசன் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

உயிரை காப்பாற்ற
அதில் எவ்வளவு பணம் செலவு செய்தாவது உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என நோயாளிகள், உறவினர்களின் மனநிலையை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளன. எனவே புதிதாக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

முதல் நாளே அதிரடி
மேலும் ஸ்டாலினும் வெற்றி பெற்ற நாள் முதல் கொரோனாவை குறைக்கவும் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தார். அதன் ஒருபகுதியாக தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் , இதற்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications