மீண்டும் வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன்: இம்முறை அண்ணாமலை மீது விமர்சனம்
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து, பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
பாஜக கட்சியின் தமிழக பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். இவர் பெண் ஒருவருடன் செல்போனில் வீடியோ செக்ஸ் சாட் செய்ததாக கூறப்படும், காட்சியை மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுமே பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அண்ணாமலை அறிக்கை
அந்த அறிக்கையில், மதன் ரவிச்சந்திரன் தன்னிடம் இதுபோல வீடியோ இருப்பதாக கூறியதாகவும், ஆனால் அதை பார்க்காமல் ராகவன் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறிவிட்டதாகவும், தொடர்ந்து மதன் இதை கூறிக்கொண்டே இருந்ததால் ஆதாரம் இருந்தால் வீடியோவை வெளியிடுங்கள் என நான் கூறினேன் என்றும் தெரிவித்தார் அண்ணாமலை.

அண்ணாமலைக்கு பாராட்டு
அண்ணாமலை இவ்வாறு தனது கட்சி பிரமுகர் குறித்த வீடியோவாக இருந்தாலும் அதை வெளியிடச் சொல்லிவிட்டதை அறிந்ததும், நெட்டிசன்கள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவு செய்ததை பார்க்க முடிந்தது. இந்த நிலையில்தான், இப்பிரச்சினையில் அடுத்தடுத்து பல டெவலப்மென்ட்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

அடுத்தடுத்து திருப்பங்கள்
நேற்று மதன் டைரி எனப்படும் மதன் நடத்தி வந்த யூடியூப் திடீரென முடங்கியது. இதை முடக்கியது யார் என்பது தெரியாமல் உள்ளது. இதன்பிறகு, மதன் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டார். இப்படியான பரபரப்புக்கு இடையே, இன்று மதன் ரவிச்சந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.

நீதி தேவை என்ற அண்ணாமலை
மதன் கூறுகையில், அண்ணாமலையை சந்தித்து, இப்படி ஒரு பாலியல் வீடியோ இருப்பதாகவும், எனவே பாஜக கட்சிக்குள் யாருக்கும் தெரியாமல், அதை விசாரணை நடத்த வேண்டும் என்று தான் வற்புறுத்தியதாகவும், ஆனால், அண்ணாமலைதான், இது நமது கட்சிக்கார பொண்ணு. இந்த பெண்ணுக்கு உடனே நீதி தேவை. எனவே வீடியோவை போட்டு விடுங்கள் என்று கூறினார் என்றும் மதன் குற்றம்சாட்டியுள்ளார். வீடியோவை வெளியிட்டு விட்டு பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்று அண்ணாமலை கூறியதாகவும் மதன் தெரிவித்தார்.

அண்ணாமலை ஆடியோ
வீடியோவை மதன் தன்னிடம் காட்சிப்படுத்தவில்லை என்று அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் நான் அவரிடம் வீடியோவை காட்டியிருந்தேன் என்று கூறும் மதன், அண்ணாமலை இது தொடர்பாக பேசிய ஆடியோவை வெளியிடுவதாக குறிப்பிட்டு ஒரு ஆடியோ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவை கேட்டு பாருங்கள் மக்களே, அண்ணாமலைக்கு, இந்த வீடியோ விஷயம் தெரியும் என்கிறார் மதன். அதேநேரம் ஆடியோவில் பேசுவது அண்ணாமலையா என்பது தெளிவாக புரியவில்லை. ஆனால் மதன் அது அண்ணாமலை என்று கூறுகிறார்.

தொடரும் பரபரப்பு
மதன் இந்த பதிவை இப்போது வெளியிட நோக்கம், கட்சிக்குள் யாருக்கும் தெரியாமல் ராகவனை அழைத்து விசாரித்திருக்க வேண்டிய விஷயம் இப்போது வெளியே தெரிய காரணம், அண்ணாமலைதான் என்பதாக இருக்கிறது. ஆனால், வீடியோவை வெளியிட வேண்டும் என்றால் செய்யுங்கள் என்று நான்தான் கூறினேன் என்று அண்ணாமலையேநேற்று வெளியிட்ட அறிக்கையில் கூட தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது மதன் ஏன் அதை குற்றச்சாட்டாக முன் வைக்கிறார் என்பது புரியவில்லை என்கிறார்கள் பாஜகவினர். எது எப்படியோ இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டே உள்ளது என்பது மட்டும் உண்மை.
-
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்?












Click it and Unblock the Notifications