கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு.. மனைவிக்கு கொடுமை செய்ததாக கருத முடியாது! உயர் நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவருக்கு வேறு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை மட்டுமே வைத்து, மனைவிக்கு அவர் கொடுமை செய்ததாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரை விடுதலை செய்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்தது. இந்த நிலையில், கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், குடும்பத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

High Court dowry harassment

இதனால் மனமுடைந்த மனைவி, தனது கைக்குழந்தையுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கணவர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களையும் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் கவனத்தில் கொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆரம்பகட்ட விசாரணையின் போது வரதட்சணைக் கொடுமை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. சாட்சிகள் விசாரிக்கப்பட்டபோது தான் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக் காட்டினார்.

இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டே, கணவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கீழமை நீதிமன்றம் முடிவெடுத்துள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 498ஏ பிரிவின்படி, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என்ற நீதிபதி, கணவரை விடுதலை செய்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய நீதிபதி சுந்தர் மோகன், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+