அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான ஓபிஎஸ் கோஷ்டி வழக்கு- ஹைகோர்ட்டில் நாளை விசாரணை!
அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை நாளை ஹைகோர்ட்டில் நடைபெற உள்ளது.
சென்னை: அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் கோஷ்டி தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினார். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் பெஞ்ச், இபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பின் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனோஜ் பாண்டியன் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தற்போது விசாரணை நடத்தினார்.
பொதுக்குழு தீர்மானங்கள் இயற்கைக்கு எதிரானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களை எதிர்த்து பிப்ரவரி 23-ந் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் வாதிட்டார். மேலும், அதிமுக விதிகள்படி உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை. உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைதான் எடுக்க முடியும். ஆனால் ஜூலை 11 பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் போட்டு ஓபிஎஸ் அணியினரை நீக்கி உள்ளனர். ஆகையால் அதிமுக உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கருத்தை கேட்காமல் தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனோஜ்பாண்டியன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டார். இதனடிப்படையில் இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், மனோஜ் பாண்டியன் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்; ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் நடைமுறைக்கு வந்து 8 மாதங்களாகிவிட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
-
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்!












Click it and Unblock the Notifications