மகளிர் உரிமைத் தொகை.. வங்கிகளுக்கு அரசு அனுப்பிய அவசர கடிதம்.. ரூ.1000 பெற தரமான வாய்ப்பு!
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் 12ம் தேதியில் இருந்து மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை தமிழக அரசு அனுப்பி உள்ளது.
அதன்படி ரூ. 1000 வழங்க தேர்வு செய்யப்பட்ட வங்கி கணக்குகளை ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகளாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் மினிமம் பேலன்ஸ் என்று ரூ.1000ஐ எடுத்துக்கொள்ள கூடாது என்பதால் அதை தடுப்பதற்காக கணக்குகளை ஜீரோ பேலன்ஸ் கணக்காக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்க, அவர்களின் கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாக மாற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. புதிதாகப் பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் இறுதி லிஸ்ட் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நவம்பர் 15 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் கிட்டத்தட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் தேவையான ஆவணங்களைப் கொடுக்கவும் இந்த முகாம்கள் பெண்களுக்கு உதவியுள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. விரிவாக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சரிபார்ப்புப் பணியில் வருமான விவரங்கள், முகவரிச் சான்றுகள் மற்றும் தகுதி அளவுகோல்கள் ஆகியவை கவனமாக ஆய்வு செய்யப்படும்.
புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், டிசம்பர் 13 முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000 கிடைக்கும். இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களைச் சென்றடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது காலக்கெடுவை இழந்த அதிகமான பெண்களைச் சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க வேண்டாம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் அல்லது மேல்முறையீடுகள் எதுவும் ஏற்கப்படாது என தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதாவது உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முடிந்துவிட்டதால் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கடந்த மாதமே மகளிர் உரிமைத் தொகை பதிவுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறிய பெண்கள் சிலர் புதிதாக விண்ணப்பம் செய்ய முயல்வதால் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டத்தின் தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி பெண்களுக்கு வழிகாட்ட, தமிழக அரசு மாநிலம் முழுவதும் 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை ஏற்பாடு செய்திருந்தது. பல வாரங்களாக நடைபெற்ற இம்முகாம்களுக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்த நிலையில், காலக்கெடுவுக்குள் 28 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
உங்களுடன் ஸ்டாலின்
விண்ணப்பச் செயல்முறை முழுமையாக முடிந்துவிட்டதால், புதிய அல்லது தாமதமான விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட அலுவலகங்கள் வழியாக செய்யப்படும் மேல்முறையீடுகள் எதற்கும் தற்போது இடமில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இத்திட்டம் தொடர்பான மனுக்கள் வாராந்திர குறைதீர் முகாம்களிலும் ஏற்கப்படாது என அரசு தரப்பு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளது.
விண்ணப்பச் சரிபார்ப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதாந்திர ஆயிரம் ரூபாய் முதல் தவணை டிசம்பர் 15 முதல் வழங்கப்படும். காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மாநிலத்தின் முக்கிய நலத்திட்டம் ஆகும். ஏராளமான விண்ணப்பங்கள் பொதுமக்களின் பெரும் ஆர்வத்தைக் காட்டினாலும், இதற்கான முகாம்களை மீண்டும் திறக்க முடியாது என அதிகாரிகள் வட்டாரம் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மட்டுமே பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications