ஒரு ஐபோனுக்காக பறிபோன 3 உயிர்கள்.. டிரெண்டான அந்த வீடியோவிற்கு பின் உள்ள வேறொரு ஷாக் கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு விலையுயர்ந்த செல்போன், ஒரு குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் ஒரே நாளில் சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தவணை முறையில் வாங்கிய ஐபோனுக்கு பணம் கேட்டு தகராறு செய்த 18 வயது மகன், அவனை சமாதானப்படுத்தச் சென்ற தந்தை மற்றும் தாய் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் 250 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சோகம் காண்போரைக் கண்கலங்க வைத்துள்ளது.

செல்போன் தவணையால் வெடித்த வாக்குவாதம்

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள சால்டா பாட்டா பகுதியைச் சேர்ந்தவர் முரளிதர் சச்கூடே. இவரது மனைவி சங்கீதா. இவர்களது 18 வயது மகன் குணால் சாந்த்வாடே.

Maharashtra iPhone EMI Tragedy Teen Parents Die After Fatal Fall from 250-Foot Hill

குணால் சமீபத்தில் தவணை முறையில் ஒரு புதிய ஐபோன் வாங்கியுள்ளார். அந்த போனுக்கான மாதத் தவணையை கட்டுவதற்கு பெற்றாரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோரால் உடனே பணம் கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.

கோபமடைந்த குணால், வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கோஹ்தியா டோங்கர் என்ற மலை உச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மகனைக் காப்பாற்ற 3 மணி நேரம் கெஞ்சிய தாய்

மகன் ஆத்திரத்தில் மலைக்குச் சென்றதை அறிந்த முரளிதரும் சங்கீதாவும் பதறியடித்துக் கொண்டு, அப்பகுதி மக்களுடன் மலை உச்சிக்கு ஓடினர். அங்கு குணால் மலையின் மிக ஆபத்தான விளிம்பில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், தாய் சங்கீதா தன் மகனைக் காப்பாற்ற கண்ணீருடன் கெஞ்சுவது பதிவாகியுள்ளது. மகன் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் அமர்ந்து, எங்களை விட்டுப் போகாதே, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.. நீ கீழே வா எனக் கதறுகிறார். ஒருகட்டத்தில் மகனின் காலில் விழுந்து வணங்கி மன்றாடுகிறார்.

ஆனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த குணால், "அம்மா, நான் சொல்வதை யாருமே கேட்பதில்லை. எனக்கு வாழ விருப்பமில்லை. என் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் கிடைக்காது; எதுவுமே மாறப்போவதில்லை" எனக் கூறி விளிம்பை நோக்கி நகர்ந்துள்ளார். சங்கீதா அவனை நெருங்க முயன்ற போதெல்லாம் அவன் இன்னும் விளிம்பிற்குச் செல்லவே, அப்பகுதி மக்கள் சங்கீதாவை பின்னுக்கு இழுத்தனர்.

வினாடியில் நிகழ்ந்த பெருந்துயரம்

சுமார் மூன்று மணி நேரமாக இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நீடித்தது. மதியம் நிலைமை எல்லை மீறுவதைக் கண்ட தந்தை முரளிதர், மெதுவாக குணால் நின்றிருந்த பகுதிக்கு ஏறிச் சென்று, அவனைப் பிடித்து பின்னால் இழுக்க முயன்றார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக இருவருமே நிலைதடுமாறி, 250 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கீழே விழுந்தனர். கண்முன்னே கணவனும் மகனும் பள்ளத்தில் விழுந்து நொறுங்குவதைக் கண்டு நிலைகுலைந்த தாய் சங்கீதா, அடுத்த சில வினாடிகளில் கதறியவாறே அவரும் அதே மலையிலிருந்து கீழே குதித்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் முரளிதர், சங்கீதா, குணால் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வைரலாகும் பழைய பாச வீடியோக்கள்

இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, குணாலும் அவரது தாயும் ஒன்றாக இருக்கும் சில பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. அதில் ஒரு வீடியோவில் தாயுடன் அமர்ந்து குணால் டீ குடிப்பதும், மற்றொரு வீடியோவில் தாயின் பாதங்களைக் கழுவி ஆசீர்வாதம் வாங்குவதும் பதிவாகியுள்ளது.

தாயின் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்த ஒரு இளைஞன், ஒரு செல்போன் தவணைக்காக எடுத்த தவறான முடிவு, தாய் - தந்தை இருவரது உயிரையும் சேர்த்து காவு வாங்கியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு கதை

அதே சமயம் அந்த இளைஞரின் அப்பாவிற்கு.. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அவரை பிரிய அம்மா ஒப்புக்கொள்ளவில்லை என்பதும் அந்த இளைஞர் தற்கொலை முடிவு எடுக்க ஒரு காரணம் என்கிறார்கள். வாழ்வின் சவால்களையும் நெருக்கடிகளையும் விவேகத்துடன் அணுகாமல், உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு வினாடி முடிவு ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+