"3 ராஜாக்கள்".. தூள் தூளாக சிதறி விழும் பாஜக கணக்கு.. ஆட்டத்தை கலைத்து ஆடும் ஸ்டாலின்.. பலே பலே

திமுகவுடன் இந்த முறை 3 கட்சிகள் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் உட்கட்சி பூசல் உள்ளிட்ட பிரச்சனைகளால், அங்கிருக்கும், சில கூட்டணி கட்சிகள் திமுக பக்கம் மெல்ல சாய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. குறிப்பாக, யுக்திகளை பாஜக கடந்த 6 மாதத்துக்கு முன்பேயே கையில் எடுத்துவிட்டது..

அந்தவகையில், தமிழகத்திலும் பாஜக விறுவிறுப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது.. திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், முதல் நபராக களத்தில் குதித்துவிட்டது பாஜக..

 ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

அதேசமயம், தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது அதிமுக கூட்டணியிலேயே இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்த ஆலோசனையும் நடந்து கொண்டிருக்கிறது.. அதிமுகவின் பிரதான ஓட்டுவங்கியை இழக்க மனமில்லாத நிலையில், அக்கட்சியின் உட்கட்சி பிரச்சனையை சமாளிக்கவும் பாஜக முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது.. ஒருவேளை எடப்பாடி ஒத்துழைக்காவிட்டாலும், மற்றவர்களை இணைத்து தன்னுடைய தலைமையில் தேர்தலை சந்திக்கவும் பாஜக விழிப்பாகவே உள்ளது.

 Dr ராமதாஸ்

Dr ராமதாஸ்

ஆனால், அதிமுகவில் உள்ள பாஜகவை தவிர மற்ற கட்சிகளை பொறுத்தவரை, இப்போது மிகவும் சோர்ந்து போயுள்ளார்களாம்.. குறிப்பாக, அதிமுகவை பாமக கடுமையாக தாக்கி பேசி வருகிறது.. அதிலும் அன்புமணி ராமதாஸ், அதிமுகவை விடாமல் குற்றஞ்சாட்டி வருகிறார்.. அதனால் இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.. அதேசமயம், இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, பாமக தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.. டாக்டர் ராமதாஸ், முன்புபோல் திமுகவை கடிந்து கொள்வதில்லை.. தாக்கி பேசுவதும் இல்லை. அந்தவகையில், திமுக பக்கம் பாமக கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

தேமுதிகவை பொறுத்தவரை, எடப்பாடி மீது கடுமையான அதிருப்தியில் உள்ளது.. கடந்த சட்டசபை தேர்தலின்போதே தேமுதிகவுக்கு சீட் தராமல் இழுத்தடித்ததை இந்த தமிழகமே வேடிக்கை பார்த்தது.. அப்போதிருந்தே அதிமுகவுடனான அதிருப்தி அக்கட்சிக்கு ஆரம்பமாகிவிட்டது.. போதாக்குறைக்கு 2 நாட்களுக்கு முன்பு விஜயபிரபாகரன், எடப்பாடி பழனிசாமியை சகட்டுமேனிக்கு விமர்சித்து கேள்விகளை எழுப்பியிருந்ததும் சோஷியல் மீடியாவில் வீடியோவாக வைரலானது.. அந்தவகையில், அதிமுகவுடன் தேமுதிக இந்த முறையும் இணையாது என்றே தெரிகிறது.. அதேசமயம், திமுக பக்கம் நல்ல இணக்கமான போக்கு உள்ளது.. அந்த கட்சி தலைவர்களும், விஜயகாந்த்தை அடிக்கடி சந்தித்து உடல்நலம் விசாரித்து வரும்நிலையில், சாதகமான சூழலே இரு தரப்பிலும் நிலவி வருகிறது.

 லாஸ்ட் டைம் கூட்டணி

லாஸ்ட் டைம் கூட்டணி

மற்றொரு பக்கம் மக்கள் நீதி மய்ய கமல்ஹாசன், இந்த முறை திமுக பக்கம் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. கடந்த தேர்தலின்போதே, உதயநிதியை வைத்து, மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால், சீட் விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால், கடைசி நேரத்தில் கூட்டணி கைகூடாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.. எனவே, இந்த முறை நிச்சயம் திமுகவுடன் மநீம கூட்டணி வைக்க நிறையவே சான்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது.

 விஜயகாந்த், கமல்

விஜயகாந்த், கமல்

அதுமட்டுமல்ல, தேமுதிக + பாமக + மநீம 3 கட்சிகளையும் இணைக்க, திமுகவும் ஆர்வம் காட்டி வருவதாக சொல்கிறார்கள்.. காரணம், தேசிய அளவில் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள, அனைவருமே ஒன்று சேர்ந்தால் தான் முடியும் என்று திமுக நம்புகிறது.. இதைதான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும் கூறியிருந்தார்.. அந்தவகையில், அணியை பலப்படுத்துவதுதான் முதல் திட்டமாக திமுகவுக்கு உள்ளது.. கடந்த முறை திமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததே, மிகப்பெரிய கூட்டணி பலம்தான்.. எனவே, இந்த முறையும் கூடுதலாக பிற கட்சிகளை இணைத்து கொள்ள தயாராக உள்ளதாக தெரிகிறது.

 தாமரைகள்

தாமரைகள்

திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தர் மட்டும் கழண்டி கொள்ள போகிறார்.. அநேகமாக அவர் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்கிறார்கள்.. அப்படியானால், இந்திய ஜனநாயக கட்சியை தவிர, மற்ற கட்சிகள் அப்படியே திமுக கூட்டணியுடன் தொடரும் பட்சத்தில், பிரதான 3 கட்சிகளும் புதிதாக இணைய வாய்ப்புள்ளதாம்.. அப்படி கூட்டணியில் இணையும் பட்சத்தில், பாமகவுக்கு தர்மபுரியும், பெரம்பலுாரும் ஒதுக்கீடு செய்யக்கூடும்.. இருந்தாலும், ராமதாஸ், விஜயகாந்த், கமல் = 3 பேரும் எத்தனை சீட்கள், எந்தெந்த தொகுதிகள் கேட்க போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

திருமாவளவன்

திருமாவளவன்

ஒருவேளை இந்த கூட்டணி சாத்தியமா என்றும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. காரணம் திமுக கூட்டணியில் விசிக உள்ளபோது, பாமக சாத்தியமாகுமா? பாமக கூட்டணிக்குள் வந்தால் தேமுதிகவும் உள்ளே வருமா? இந்த கட்சிகள் எல்லாம் கூட்டணிக்குள் வந்தால் காங்கிரசுக்கு ஒதுக்கும் சீட் இன்னும் குறையுமே? அதை அவர்கள் ஏற்பார்களா? கம்யூனிஸ்ட்கள், மதிமுக கணக்கு என்ன? இதெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+