4 "தலைகள்".. உடனே ஆரம்பிங்க.. எடப்பாடி தந்த மேஜர் அசைன்மென்ட்.. "அடையாளம்" மாறுதா.. அப்ப ஓபிஎஸ்?
சென்னை: மேஜர் அசைன்மெண்ட் ஒன்றை எடப்பாடி பழனிசாமி, அந்த 4 பேருக்கு தந்துள்ளாராம்.. பின்னணி காரணம் என்ன?
எடப்பாடி பழனிசாமி, இந்த ஒட்டுமொத்த தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதே, சாதிய ரீதியான கட்சியாகவே அதிமுக தொண்டர்களிடம் தோற்றத்தை உருவாக்கியது.
ஓபிஎஸ் ஒரு பக்கம், எடப்பாடி மறுபக்கம் என தெற்கு + கொங்கு என ஆட்சி காலத்தில் அரசியல் செய்து வந்தனர்.. 4 ஆண்டு காலம் ஓரளவு இணக்கமாக இவர்கள் சென்றாலும், சட்டசபை தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில், 2 தலைவர்களிடம் அதிருப்திகள் வெடித்தன.
ஊளையிடுவதால் உண்மையை மறைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலடி!

தேவர் ஜெயந்தி
அந்த நேரத்தில் தேவர் ஜெயந்தி விழா அப்போது சிறப்பாக கொண்டாடப்பட்டது.. சசிகலா உட்பட ஓபிஎஸ் டீம் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் பசும்பொன்னுக்கு நேரடியாக சென்று தேவர் சிலைக்கு மாலை போட்டு வந்தார்கள்.. பிறகு திடீரென பசும்பொன் தேவர் குறித்த ஒரு ட்வீட்டை மட்டும் எடப்பாடி பதிவிடவும், ஒருவேளை இவர் பசும்பொன்னுக்கு செல்ல மாட்டாரோ என்ற சந்தேகத்தை அந்த ட்வீட் கிளப்பியது. ஆனால், உடல்நிலை காரணம் காட்டி, பசும்பொன்னுக்கு போகாமல் எடப்பாடி தவிர்த்தார்..

தெற்கு + கொங்கு
ஓபிஎஸ் + சசிகலா இருவரையுமே நேரில் சந்திக்க நேரிடும் என்பதாலேயே இந்த பயணம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. வழக்கமாக, கட்சியின் இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு ஒவ்வொரு வருடமும் பசும்பொன்னுக்கு சென்று மரியாதை செலுத்தி வந்த நிலையில், எடப்பாடி அங்கு செல்லாதது, அச்சமூகத்தினரிடையே, அதிருப்தியையே பெற்று தந்தது..

அப்செட்
ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மீது தென்மண்டலத்தில் அதிருப்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த இந்த அதிருப்தியை, தன்பக்கம் அறுவடை செய்து கொள்ள சசிகலா மற்றும் ஓபிஎஸ் அப்போதே திட்டமிட்டதாக தகவல்கள் வெளிவந்தன. எடப்பாடி பழனிசாமியை முக்குலத்தோருக்கு எதிரானவர் என்கிற முத்திரையை குத்த இந்த தேவர் ஜெயந்தி வாய்ப்பு எந்த அளவுக்கு சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு உதவியதோ, அதுபோலவே மாயத்தேவருக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி செல்லாததையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வருவதாக கூறப்படுகிறது..

டோட்டல் சேன்ஞ்
எடப்பாடி பழனிசாமி சார்பாக திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயக்குமார், பரமசிவம், ஜக்கையன், பார்த்திபன், தேன்மொழி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினாலும், மாயத் தேவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஏன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று அவரது உறவினர்கள், அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். அதிமுக ஏற்கெனவே தெற்கு Vs மேற்கு என்று பிரிந்துள்ள நிலையில், முக்குலத்தோர் அடையாளமாக திகழ்ந்த ஓபிஎஸ்ஸையே கட்சியில் இருந்து தூக்கிய நிலையில் எடப்பாடிக்கு, தென்மண்டலத்தில் எக்கச்சக்க நெருக்கடி கூடிவிட்டது..

அப்பாயிண்ட்மென்ட்
இந்நிலையில்தான், ஒருசில அதிரடிகளை கையில் எடுத்தார் எடப்பாடி.. அச்சமூக மக்களின் மனதை குளிர வைப்பதற்காகவே பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமாருக்கும் தந்தார்.. கண்ட ஆர்ப்பாட்டத்திற்கும் உதயகுமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதிலும்கூட, எடப்பாடி மீதான செல்வாக்கு அந்த அளவுக்கு தென்மண்டங்களில் கூடவில்லை என்றே சொல்கிறார்கள். அதனால்தான், எடப்பாடிக்கு புது ஐடியா ஒன்றை 4 பேர் கொண்ட சீனியர்களும் தந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்ற ஏற்கனவே இருந்த பிளானை மாற்றி, தெற்கு பக்கம் முதலில் கவனத்தை உடனடியாக திருப்ப வேண்டும் என்றும் எடப்பாடியிடம் வலியுறுத்தினார்களாம்.

ஐடியா
அதிலும் ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன்பே, தெற்கில் சுற்றுப்பயணத்தை துவங்கிவிட வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. அப்படி தென்மண்டல சுற்றுப்பயணத்தில், தனித்தனியாக முக்கிய நிர்வாகிகளை சந்திக்க போகிறாராம் எடப்பாடி.. அப்படி சந்திக்கும்போது, அவர்களுடன் ஆலோசனை நடத்தி, கருத்தையும் கேட்க போகிறாராம்.. குறிப்பாக, இறந்த போன அந்தந்த சமூக தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்துவது, அந்த தலைவர்களின் சேவையை எடுத்துரைப்பது, போன்றவைகளை செய்து, முக்குலதோர் சமுதாயத்தை கவரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது..

சீனியர்கள்
இதற்கான அசைன்மென்ட் 4 சீனியர் அமைச்சர்களிடம் தரப்பட்டுள்ளது.. நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்கள்தான் இந்த பணியை செய்ய போகிறார்கள்.. இப்படி ஒரு ஐடியாவை இந்த நேரத்தில் எடப்பாடிக்கு தந்தது இந்த 4 சீனியர்களும்தானாம்.. ஏற்கனவே அங்குள்ள சீனியர்கள், இந்த 4 பேருக்கும் பொறுப்பை தந்ததால், கடுப்பில் உள்ளனர்.. இப்போது இன்னொரு சான்ஸையும் இவர்களுக்கே தந்துள்ளதால், அதிருப்திகளும் சலசலப்புகளும் கூடி உள்ளன.. எனினும், எனினும், தெற்கில், எடப்பாடி மீதான அதிருப்தி நீங்குமா?.. அவருக்கான "கொங்கு நிறம்" மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!