இந்தியாவில் இதுவரை நடக்காத சம்பவம்.. ரூ.271 கோடிக்கு தனி வீடு வாங்கிய நபர்! யாருங்க இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையை அதிரவைக்கும் வகையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அதிநவீன சொகுசு குடியிருப்புத் திட்டமான டிஎல்எஃப் தி டாலியாஸ் வளாகத்தில், தொழிலதிபர் மானவ் சர்தானா ரூ.271 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பென்ட்ஹவுஸ் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். தனிநபர் ஒருவர் வாங்கிய மிக விலையுயர்ந்த ஒற்றை குடியிருப்பு ஒப்பந்தங்களில் ஒன்றாக இது இந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.

குருகிராமின் முக்கிய அடையாளமாகத் திகழும் செக்டார் 54, கோல்ஃப் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்த 'தி டாலியாஸ்' வீடு, நாட்டின் மிக ஆடம்பரமான குடியிருப்புப் பகுதியாக உருவெடுத்து வருகிறது. இந்த பென்ட்ஹவுஸின் கட்டடத்தின் மொத்த பரப்பளவு (சுமார் 17,200 சதுர அடியாகும். இதில் பயன்பாட்டுப் பரப்பளவு மட்டும் சுமார் 10,500 சதுர அடியைக் கொண்டுள்ளது.

Manav Sardana Buys DLF Dahlias Penthouse

இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், மொத்த பரப்பளவின் அடிப்படையில் சதுர அடிக்கு ரூ.1.58 லட்சமும், கார்பெட் பரப்பளவின் அடிப்படையில் சதுர அடிக்கு ரூ.2.6 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை போன்ற பெருநகரங்களின் மிக ஆடம்பரப் பகுதிகளுக்கு இணையான சதுர அடி விலையை குருகிராம் எட்டியுள்ளது என்பதை இந்த விற்பனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

யார் இந்த மானவ் சர்தானா?

ரூ.271 கோடிக்கு வீட்டை வாங்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள மானவ் சர்தானா, டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான வணிகப் பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற சர்தானா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான இம்பீரியல் ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறது.

1969-ஆம் ஆண்டு மானவ் சர்தானாவின் தந்தை எஸ்.பி. சர்தானா மற்றும் ஜெகஜீத் சிங் ஆகியோரால் தொடங்கப்பட்ட இம்பீரியல் ஆட்டோ நிறுவனம், ஃபரிதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வாகனம் மற்றும் கனரக எந்திரங்களுக்கான Fluid transmission products தயாரிப்பதில் உலகளவில் பெயர் பெற்ற இந்நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாகும்.

டிஎல்எஃப் தி டாலியாஸ் திட்டத்தின் பின்னணி

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் (DLF), அக்டோபர் 2024-இல் குருகிராம் ஃபேஸ் 5-இல் 17 ஏக்கர் பரப்பளவில் இந்த 'தி டாலியாஸ்' அதிநவீன சொகுசு குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கியது. சுமார் 420 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பென்ட்ஹவுஸ்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், சாதாரண வீடுகளின் விலையே ரூ.100 கோடி முதல் ரூ.170 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக பரப்பளவு மற்றும் பிரத்யேக வசதிகள் கொண்ட பென்ட்ஹவுஸ்கள், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஒட்டுமொத்தத் திட்டத்தின் மூலம் ரூ.40,000 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கும் என டிஎல்எஃப் நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும், தற்போதே இதில் 65 சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் விற்பனையாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், இந்தியாவில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடையே பெரிய மற்றும் அதிக விலை கொண்ட சொகுசு வீடுகளை வாங்குவது கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மும்பை மற்றும் குருகிராம் போன்ற நகரங்களில் அதிக மதிப்பிலான பென்ட்ஹவுஸ்கள் மற்றும் குடியிருப்புகள் தொடர்ச்சியாக விற்பனையாகி வருகின்றன. இதுவரை 352 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 185-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை உருவாக்கியுள்ள டிஎல்எஃப் நிறுவனத்திற்கு, இந்த ரூ.271 கோடி பென்ட்ஹவுஸ் விற்பனை மற்றொரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+