தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஷாக்! 22 கேரட் நகையில் இனி ஹால்மார்க் கட்டாயம்! இவர்களுக்கு புது ரூல்ஸ்
சென்னை: தங்க நகைகள் வாங்குவது என்பது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது. ஆனால், நாம் வாங்கும் தங்கம் சுத்தமானதா என்பதை உறுதிப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும். இதற்காகத்தான் இந்திய அரசு மற்றும் பி.ஐ.எஸ் (BIS) அமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்கியுள்ளது.. இந்த முத்திரையின் முக்கியத்துவம், அவசியம் என்ன? அதன் பயன்கள் என்னென்ன? அதை பற்றி தான் இங்கு நாம் சுருக்கமாக பார்க்க போகிறோம்.
ஹால்மார்க் என்பது ஒரு தங்க நகையின் தரம் மற்றும் தூய்மையை சான்றளிக்கும் ஒரு முத்திரையாகும். இது நுகர்வோரை ஏமாற்றத்தில் இருந்து பாதுகாப்பதுடன், அவர்கள் செலுத்தும் பணத்திற்கு உரிய மதிப்பிலான தங்கம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

ஹால்மார்க் முத்திரை
ஹால்மார்க் முத்திரையின் முக்கியத்துவம் மிகவும் முதன்மையானது. பொதுவாக, ஒரு சாதாரண நுகர்வோரால் தங்கத்தின் தூய்மையை வெறும் கண்ணால் பார்த்து நம்மால் கண்டுபிடிக்க முடியாது...
சிலசமயம், 22 காரட் என்று சொல்லி குறைந்த தரத்திலான தங்கத்தை விற்கவும் சான்ஸ் உள்ளது.. ஆனால் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளில் அப்படியெல்லாம் ஏமாற்று வேலைகளுக்கு இடமில்லை. இந்த முத்திரை இருந்தால், அந்த நகையை மறுவிற்பனை செய்யும்போதும் அல்லது அடகு வைக்கும்போதும் அதன் மதிப்பை குறைத்துக் மதிப்பிட முடியாது..
22 காரட் தங்க நகைகள்
இதன் மூலம் வெளிப்படையான வர்த்தகம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், சர்வதேச தரத்திற்கு நிகராக இந்திய தங்க நகைகளின் தரத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஒரு தங்க நகையில் ஹால்மார்க் முத்திரை எப்படி இருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு ஹால்மார்க் நகையில் 3 முக்கியமான அடையாளங்கள் இருக்கிறதாம்.
முதலாவது, பி.ஐ.எஸ் லோகோ (BIS logo), இது ஒரு முக்கோண வடிவில் இருக்கும். 2வது தங்கத்தின் தூய்மையை குறிக்கும் நம்பர்.. உதாரணமாக, 22 கேரட் தங்கமாக இருந்தால் அதில் 22K916 என்று குறிக்கப்பட்டிருக்கும். 18 காரட் என்றால் 18K750 என்று இருக்கும்.
6 டிஜிட் எழுத்துக்கள், எண்கள்
3வதாக மிக முக்கியமான அடையாளம், ஹெச்.யு.ஐ.டி (HUID) எண். இது ஒவ்வொரு நகைக்கும் வழங்கப்படும் தனித்துவமான 6 டிஜிட் எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட குறியீடாகும். இந்த எண்ணை பி.ஐ.எஸ் செயலியில் உள்ளீடு செய்து பார்த்தால், அந்த நகையின் எடை, தூய்மை மற்றும் அது எப்போது ஹால்மார்க் செய்யப்பட்டது போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்..
இப்போது இந்திய அரசு நாடு முழுவதும் ஹால்மார்க் சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆசியானெட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் மேலும் பல மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான மேம்படுத்தப்பட்ட பட்டியலை பி.ஐ.எஸ் வெளியிட்டிருக்கிறது.
தமிழக மாவட்டங்கள்
அதில், நம் தமிழ்நாட்டில் ஆற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் இந்த புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன..
இந்த மாவட்டங்களில் உள்ள நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்பனை செய்ய முடியாது ..
இந்த நடவடிக்கையானது இந்தியவின் கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் உள்ள மக்களும் தரம் குறைந்த தங்கத்தை வாங்கி ஏமாறாமல் இருக்கவும், நாடு முழுவதும் ஒரே சீரான தங்கத் தரத்தை உறுதிப்படுத்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது...!!
-
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications