சென்னையில் இன்று மின்தடை.. கிண்டி உள்பட 12 பகுதிகளில் மக்களே கவனம்! முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்ப பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக கிண்டி, ஆலந்தூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், செம்பாக்கம் உள்பட 12 இடங்களை சுற்றிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 31.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையின் கிண்டி, ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், வானூவம்பேட், குரோம்பேட்டை, தாம்பரம் மேற்கு, பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சேலையூர், செம்பாக்கம், கடப்பேரி, திருவேற்காடு மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜேஎன் சாலை, அம்பள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோவில் 1 முதல் 5 தெருக்கள், ஏபிசி மற்றும் டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு ட்டம், மவுண்ட் ரோட்டின் ஒரு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஆலந்தூர்: நோபல் தெரு, கண்ணன் காலனி, மாரீசன் 6வது தெரு, எம்ஜிஆர் நகர், ஏஏஐ குவார்ட்டர்ஸ், ஜிஎஸ்டி சாலை, சாந்தி பெட்ரோல் பங்க் அருகே, கேவி குவார்ட்டர்ஸ், ஆலந்தூர் நீதிமன்றம், எம்ஜிஆர் நகர், டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.
செயின்ட் தாமஸ் மவுண்ட்: பத்திரிகை சாலை, மங்காலம்மன் வளைவு, பூந்தோட்டம் 2, 3வது தெரு, நந்தம்பாக்கம் ராமர் கோவில் தெரு, பட் ரோடு, பர்மா காலனி, வடக்கு சில்வர் தெரு, நசரத்புரம், காரையார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
வானூவம்பேட் - பெருங்களத்தூர்: வானூவம்பேட் ஏரியாவை எடுத்து கொண்டால் சாந்தி நகர், சுரேந்தர் நகர், கேசரி நகர் பகுதி, வித்யா நகர், முத்தையாள் ரெட்டிநகர், பராதிதாசன் தெரு, பாலாஜி நகர், உள்ளகரம், உஷார் நகர் உள்ளிட்ட இடுங்களிலும், பெருங்களத்தூர் பகுதியை பொறுத்தவரை பாரதி நகர் 1 முதல் 7 வது தெரு, காந்தி நகர், கண்ணன் அவென்யூ, ஜிஆர் அவென்யூ, ராஜராஜேஸ்வரி நகர் பகுதிகளில் மின்சப்ளை இருக்காது.
குரோம்பேட்டை: ராதா நகர், கண்ணன் நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர்சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், நடேசன் நகர், தபால் நகர், ஏஜிஎஸ் காலனி, ஒம் சக்தி நகர், முத்துசாமி நகர், சோமு நகர், புதிய காலனி பகுதி, ஜிஎஸ்டி சாலை, சிலெ்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகர் பகுதி, பஜனை கோவில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகர் என்எஸ்ஆர் சாலை பகுதியில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஆயிரம் விளக்கு: பேகம் சாஹிப் 1 முதல் 3வது தெரு, காளியம்மன் கோவில் 1 முதல் 2வது தெரு, ராமசாமி தெருவின் ஒரு பகுதி, பணக்கார ஆரோக்கியன் தெரு ஒரு பகுதி, திருவீதியான் தெரு பகுதி, பதரி சாலை, ரங்கூன் தெரு, அண்ணாசாலை கதவு எண் 709 முதல் 737, கிரீம்ஸ் சாலை (முருகேசன் வளாகம்), கிரீம்ஸ் சாலை கதவு எண் 16 முதல் 24 மற்றுமு் 97 முதல் 126 வரை, அஜீஸ் முல்க் 3வது தெரு கதவு எண் 1 முதல் 8 மற்றும் 89 முதல் 96 வரை, ஸ்பென்சர் பிளாசா பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
தாம்பரம் மேற்கு - மாடம்பாக்கம்: தாம்பரம் மேற்கு பகுதியை எடுத்து கொண்டால் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்), மங்களபுரம், மாடம்பாக்கம் ஏரியாவில் தேனுபுரி ஹவுசிங் காலனி, ஞானானந்தா நகர், ஐஎம் கியர், ஆஞ்சநேயர் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு (பகுதி), அற்புதாலயா, இந்திரா நகர் மற்றும் சந்தோஷபுரம் பிரதான சாலை பகுதிகளில் மின் சப்ளை இருக்காது.
சேலையூர் - செம்பாக்கம்: மாதா நகர், லட்சுமி நகர், ஐஏஎப் மெயின் ரோடு, ரிக்கி கார்டன், ஏகேபி ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்ட்மென்ட், சுமேர சிட்டி, சீனிவாச நகர், மகாதேவன் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது. அதேபோல் செம்பாக்கம் பகுதியில் ஜெயந்திரா நகர் பிரதான சாலை, சாமராஜ் நகர், ஈஸ்வரி நகர், பல்லணையப்பா நகர், குருசுவாமி நகர், சோவந்தரி நகர் பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
கடப்பேரி - திருவேற்காடு: சுந்தரம் காலனி 1 முதல் 3வது பிரதான தெருக்கள், எஸ்வி கோவில் தெரு, விவி கோவில் தெரு, ரயில்வே பார்டர் சாலை, அமர ஜீவா தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1 மற்றும் 3வது குறுக்கு தெரு, வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, குப்புசாமி தெரு, மாதவன் தெரு, சுந்தராம்பாள் நகர், சர்மிளா தெரு, குடிநீர் வாரியம், குமரன் தெரு, ஜீவா தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது. திருவேற்காடு பொறுத்தவரை கேந்திரிய விகார், இண்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நூம்பல் பிரதான சாலை, பிஎச் ரோடு பகுதியில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications