சென்னையில் பல சொத்து உரிமையாளர்கள் செலுத்தியது சொற்பமான வரி.. நிதி நிபுணர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள ஒவ்வொரு சொத்தைப் பற்றியும் எனக்குத் தெரியாது. ஆனால், பல சொத்து உரிமையாளர்கள் செலுத்தும் சொத்து வரி மிக மிகக் குறைவான தொகை என்பது எனக்குத் தெரியும். எங்கள் சொந்த வீட்டையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். எங்கள் பிளாட்டின் தற்போதைய விற்பனை மதிப்பு மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய வாடகை வருமானத்தோடு ஒப்பிடும்போது, நாங்கள் செலுத்தும் சொத்து வரி மிகவும் சொற்பமானது என்று நிதி நிபுணர் முத்துக்கிருஷ்ணன் தண்டபாணி எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

நிதி நிபுணர் முத்துக்கிருஷ்ணன் தண்டபாணி கூறுகையில், "சென்னை மாநகராட்சியின் அசுர சொத்து வரி உயர்வால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள ட்வீட்களைப் பார்க்க முடிகிறது. இது மிகவும் இயல்பான, எதிர்பார்க்கக்கூடிய ஒரு எதிர்வினைதான். அதே நேரத்தில், அரசு ஏன் இப்படிச் செய்கிறது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை விளக்குகிறேன்:

Many property owners in Chennai paid a paltry amount in taxes Financial expert s statement

சென்னையில் உள்ள ஒவ்வொரு சொத்தைப் பற்றியும் எனக்குத் தெரியாது. ஆனால், பல சொத்து உரிமையாளர்கள் செலுத்தும் சொத்து வரி மிக மிகக் குறைவான தொகை என்பது எனக்குத் தெரியும்.

எங்கள் சொந்த வீட்டையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். எங்கள் பிளாட்டின் தற்போதைய விற்பனை மதிப்பு மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய வாடகை வருமானத்தோடு ஒப்பிடும்போது, நாங்கள் செலுத்தும் சொத்து வரி மிகவும் சொற்பமானது. அது ஏன் அவ்வளவு குறைவாக நிர்ணயிக்கப்பட்டது என்றே எனக்குத் தெரியவில்லை.

நகர வளர்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு, அரசே இதைக் குறைந்த பிரயத்தனத்தில் நிதி திரட்டும் எளிய வழியாக கருதியிருக்கலாம். எனது சில கூடுதல் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

எல்.பி.ஜி மானியம்

பிரதமர் நரேந்திர மோடி வசதியானவர்களைச் சமையல் எரிவாயு (LPG) மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டபோது, அதைத் துறந்த குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.

இலவச மின்சாரம்

தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் எங்களைப் போன்ற வசதியானவர்கள் உட்பட அனைவருக்கும் இலவச மின்சாரத்தை வழங்குகிறது. எங்களுக்கு அரசினுடைய மானியம் எதுவுமே தேவையில்லை. ஆனால் அதைத் துறப்பதற்கான வழிமுறை இங்கு இல்லை. நிதி ரீதியாக நன்றாக இருக்கும் மக்களுக்கு ஏன் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்?

மின்சார வாரியத்தின் நிலை

மின்சார வாரியத்தின் தற்போதைய நிதிநிலையைக் கவனத்தில் கொண்டால், எதிர்காலத்தில் இந்த விவகாரமும் ஏதேனும் ஒரு வழியில் சரிசெய்யப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

வழிகாட்டி மதிப்பு உயர்வு

சந்தை மதிப்பிற்கும், அரசின் வழிகாட்டி மதிப்பிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியைக் குறைக்க அரசு செயல்பட்டு வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

பத்திரப் பதிவு வருவாய்

இது கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழித்து, வழிகாட்டி மதிப்பை உண்மையான சந்தை மதிப்புக்கு நிகராக மாற்றும். ஆனால், வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படுவதால் பத்திரப் பதிவுச் செலவு அதிகரிக்கும். அரசுக்கு வரும் வருவாயும் கணிசமாக உயரும். சீர்திருத்தங்கள் பற்றிப் பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், எந்தவொரு அர்த்தமுள்ள சீர்திருத்தமும் சமுதாயத்தில் சில வலிகளையும், சிரமங்களையும் ஏற்படுத்தாமல் சாத்தியமாகாது.
தற்போது ஏன் இதெல்லாம் நடக்கிறது என்பதற்கான எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+