"வேட்டியை" மடித்து கட்டிய ஸ்டாலின்.. குன்னூரில் ஞாபகம் இருக்கா.. பாஜகவுக்கு இதான் வேலை: நச் அமுதரசன்
சென்னை: தமிழக அரசின் பெருமைகள் எப்போதெல்லாம் பேசப்படுகிறதோ, தமிழக அரசின் செயல்பாடுகள் எப்போதெல்லாம் புகழ் வெளிச்சத்துக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அதை மங்கலாக்க செய்யும் வகையில் அண்ணாமலை பேசுவது இயல்பு என்று திமுகவின் அமுதரசன் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழக ஆளுநரை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியிருந்தநிலையில், செய்தியாளர்களையும் சந்தித்தார்.. அப்போது, "ஆளுநரைச் சந்தித்து பாஜக சார்பில் 2 முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
ட்ரிபிள் “அ”.. ஆன்லைன் ரம்மி + ஆளுநர் + அண்ணாமலை! லிங்க் இருக்குமோ? காங்கிரஸ் எம்பிக்கு வந்த டவுட்டு

அமுதரசன்
நமது பிரதமர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக ஜூலை 29-ம் தேதி 2022 அன்று தமிழகம் வந்திருந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தனது பணியிலிருந்து தவறியிருக்கிறது, என்பதற்கான குற்றச்சாட்டை ஆதாரத்தின் அடிப்படையில் கொடுத்து வந்திருக்கிறோம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்" என்றார்.
இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக, திமுகவின் அமுதரசன் ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்... அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டுகளை அவரிடம் முன்வைத்தோம். அமுதரசன் நமக்கு தந்த பதில்கள்தான் இவை:

அச்சுறுத்தல்
"உலக அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் கொண்ட நபராக மோடி இருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.. ஆனால், பாஜகவின் டெல்லி தலைமை என்ன சொல்கிறதென்றால், உலக அளவில் நட்புறவை பேணுவதில் அதிக முன்னணியில் உள்ளவர் மோடி என்று சொல்கிறார்கள்.. அதனால், அவர்களின் தலைமையின் கருத்துக்களில் இருந்தே அண்ணாமலை வேறுபடுகிறார்.. உலகத்தின் அமைதிக்கே அச்சுறுத்தல் என்பது போல சொல்கிறார் அண்ணாமலை. எனவே, தலைமை கருத்து என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதற்கு பிறகு அண்ணாமலை பேச வேண்டும்..

விளம்பர வெளி
எப்பவுமே உளறுவது சரியாக இருக்காது.. தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காகவும், விளம்பர வெறியும் நிறைந்தவர் அண்ணாமலை.. 2 நாள் அண்ணாமலை அமைதியாக இருந்தாலே, ஏதோ ஒரு வீடியோ, ஆடியோ ரிலீஸ் ஆக போகிறது என்ற பயம் அதிகமாக இருந்து வருகிறது.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், பாதுகாப்பின்மை போன்றவை எல்லாம், பாஜகவுக்குள் வேண்டுமானால் இருக்கலாம்.. தமிழகத்தில் அப்படி ஒரு பிரச்சனை கிடையாது..

ஃபுல் செக்யூரிட்டி
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்துக்கு பிரதமர் மோடி பலமுறை வந்து போயுள்ளார்.. எப்போதெல்லாம் பிரதமர் இங்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல், மிக சிறப்பான முறையில் தமிழக அரசு பாதுகாப்பு தந்து வருகிறது.. மேலும், ஒன்றிய அரசில் இருந்தும் பாதுகாப்பு அலுவலர்கள் முன்கூட்டியே இங்கு வந்து, எத்தனை அடுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பது குறித்தும் நேரடியாகவே பார்ப்பார்கள்.. அப்போதெல்லாம் அவர்களுக்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து தந்துள்ளது.

மாஸ் ஸ்டாலின்
பிரதமர் வந்து செல்லும்வரை எந்தவிதமான பரபரப்பு செய்திகளும்கூட இங்கு வந்ததில்லை.. அந்த அளவுக்கு அரசு சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டுள்ளது.. ஆனால், அண்ணாமலையின் மலிவான அரசியல் யுக்தியானது, என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது போல இருந்து வருகிறது.. முப்படை தளபதி பிபின் ராவந்த் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது, இன்றைக்கு சட்டம் ஒழுங்கை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பாஜகவின் அண்ணாமலையோ அல்லது அவரது கட்சியை சார்ந்தவர்களோ யாருமே அங்கு போய் நிற்கவில்லை.

ட்வீட்கள்
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின், ஒரு கடைநிலை ஊழியரைப்போல, வேட்டியை மடித்துக் கொண்டு, அத்தனை பணிகளையும் முன்னெடுத்துக் கொண்டு செய்தார்.. ராணுவமே அன்றைய தினம், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ட்வீட்களையும் பதிவிட்டனர்.. மகிழ்ச்சியோடு வாழ்த்து சொன்னார்கள்.. ஒரு மாநிலத்தின் முதல்வர், இந்த அளவுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு தருவார் என்று எதிர்பார்க்கவேயில்லை என்றும் சொன்னார்கள்.. இதுதான், திமுக அரசின் செயல்பாடும், நிர்வாகத்திறனும்..

ஃப்ரூப் எங்கே
எனவே, நாம் எது பேசினாலும், தமிழ்நாட்டு மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் எனறு நினைத்துக் கொண்டு, பாஜகவின் கட்சி கூட்டத்தில் பேசுவது போல, எதையாவது அண்ணாமலை பேசிவருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமரின் பாதுகாப்பில் குறை இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறது என்கிறார் அண்ணாமலை.. ஆனால், இதுவரை வெளிப்படையாக எந்த ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை.. அப்படி ஆதாரத்தை காட்டினால், தமிழக அரசோ அல்லது ஒன்றிய அரசோ நடவடிக்கை எடுக்கட்டும்..

கள்ள மவுனம்
தமிழக அரசின் பெருமைகள் எப்போதெல்லாம் பேசப்படுகிறதோ, தமிழக அரசின் செயல்பாடுகள் எப்போதெல்லாம் புகழ் வெளிச்சத்துக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அதை மங்கலாக்க செய்யும் வகையில் அண்ணாமலை பேசுவார்.. இந்தியாவின் வரலாறு என்பதே தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.. அந்தவகையில், இப்போது மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்துள்ளது.. தமிழகத்தின் தொன்மை வெளிவந்துள்ளது.. இதை பற்றி யாரும் பேசவிடக்கூடாது என்பதற்காகவே, இங்கே இப்படி எதையாவது கிளப்பி விடுவார்கள்..

கொதிப்பு நிலை
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒப்புதல் அளித்த ஆளுநர், அதை சட்டமாக்க ஒப்புதல் அளிக்கவில்லை.. இதனால்தான், தமிழக மக்கள் தற்போது கொந்தளித்து போயுள்ளனர். எப்போதுமே கள்ள மவுனம் காக்கிறார் ஆளுநர்.. பாஜகவின் முகவர் போல செயல்படுவதால், அவரை பாதுகாக்கக்கூடிய வேலையை அண்ணாமலை செய்கிறாரே தவிர, மக்களின் அவசர தேவையை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை" என்றார்.