தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3வது பிரசவத்துக்கும் 365 நாள் விடுப்பு.. அறிவித்த அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 3வது குழந்தையின் பிரசவத்துக்கும் இனி 365 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

Sarathkumar

தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ விடுப்பு ஓராண்டு வரை வழங்கப்பட்டு வருகிறது. முதல் குழந்தை பிறக்கும்போது ஓராண்டும், அதன்பிறகு 2வது குழந்தை பிறக்கும்போது ஓராண்டும் அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ விடுப்பு வழங்கப்பட உள்ளது.

அதேவேளையில் அரசு பெண் ஊழியர்கள் 3வது குழந்தையை பெற்றெடுத்தால் அவர்களுக்கான பிரசவ விடுப்பு ஓராண்டு கிடையாது. வெறும் 12 வாரங்கள் (3 மாதங்கள்) மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த 3வது குழந்தைக்கான பிரசவ விடுமுறையையும் 365 நாளாக அதிகரிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

இதனை இன்று தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று சட்டசபையில் வெளியானது. தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் இன்று சட்டசபையில் பேசினார். அப்போது அவர், ''தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கான பிரசவ விடுமுறை 12 வாரங்களில் இருந்து ஓராண்டாக (365 நாள்) உயர்த்தப்படுகிறது'' என்றார்.

இந்த அறிவிப்பு பெண் அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.முன்னதாக அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தையின் பிரசவத்துக்கு 12 வாரம் மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து இருந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாய்நிஷா என்பவர் தனது 3வது பிரசவத்திற்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை பிரசவ விடுப்பு கோரி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் 3வது பிரசாவத்திற்கு 12 வாரம் மட்டுமே விடுப்பு எனும் தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டினார். ஏப்ரல் மாதத்துக்கு பணியில் சேர வேண்டும் என்று 3 மாதம் மட்டுமே விடுப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சாய்நிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3வது பிரசவத்துக்கும் ஓராண்டு வரை பிரசவ விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறி சாய்நிஷாவிற்கு ஓராண்டு வரை விடுப்பு வழங்க உத்தரவிட்டது.

அதோடு முதல் பிரசவம் மற்றும் 2வது பிரசவத்தின்போது அனுபவிக்கும் அதே வலியை 3வது பிரசவத்திற்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள். இதனால் பாரபட்சம் காட்ட முடியாது. இதனால் 3வது பிரசவத்திற்கு 12 வாரம் மட்டுமே விடுமுறை என்ற தமிழக அரசின் அரசாணை மாவட்ட நீதித்துறையை கட்டுப்படுத்தாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+