பாதி அம்மா உணவகம் பூட்டிதான் இருக்கு! முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா? மேயர் பிரியா வெளியிட்ட தகவல்
சென்னை : சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் கிடக்கிறது எனவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரது ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை மாநகராட்சி மண்டலம் 10 கோடம்பாக்கத்திற்கு உட்பட்ட 127-வது வார்டு முதல் 142-வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

மேயர் பிரியா
இந்தக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை, தேவைகளை எடுத்துரைத்தனர். மேலும், புதிதாக தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்து பேசினர். இதனை கேட்டறிந்த பின்னர், "திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கு செல்லும் போது மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துச் செல்ல வேண்டும், மயானங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என மேயர் அறிவுரை வழங்கினார்.

அம்மா உணவகங்கள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா, "மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 178 சாலைகள் அமைக்கும் பணி, 58 பூங்காக்கள் மேம்படுத்தும் பணிகள் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமுதாய நலக்கூடங்களில் தனிநபர்கள் அதிக கட்டணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

பூட்டை கூட திறக்கவில்லை
அப்படி ஏதேனும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களை மக்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. பல இடங்களில் பூட்டை கூட திறக்காத நிலை உள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரின் ஆலோசனைப்படி செயல்படுவோம்" என்றார்.

பெருந்தன்மையாக முதல்வர்
இதன்பிறகு பேசிய துணை மேயர் மகேஷ்குமார், "அம்மா உணவகம் கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றாலும் மக்கள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு அம்மா உணவகம் மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இதனை சென்ற ஆட்சியாளர்களின் பெயரினில் நடத்த பெருந்தன்மையாக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications