Mayor Priya: போர் அடிக்குதா? 3 மணி நேரம் படம் பார்க்க மட்டும் நேரம் இருக்கா? எம்எல்ஏ தாமுவுக்கு மேயர் பிரியா கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் போது தவெக எம்.எல்.ஏ தாமு போர் அடிக்குது என்று சொல்கிறார்.. போர் அடிக்குது என்றால் நீங்க அந்த கூட்டத்திற்கு வந்திருக்கவே கூடாது. ஒரு தியேட்டரில் மட்டும் நீங்க 3 மணி நேரம் அமர்ந்து படம் பார்க்க முடியுது அல்லவா.. எங்க தலைவர் படம், எங்க அண்ணன் படம் என சொல்லிக்கொண்டு பார்க்க முடிகிறது.. ஆனால் வாக்களிச்ச மக்களுக்காக உங்களால் 3 மணி நேரம் மீட்டிங்கில் உக்காந்து காது கொடுத்து கேக்க முடியவில்லையா என மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தை அலட்சியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் எடுக்காமல் இருப்பதையும், சென்னை மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் தவெக அரசை கண்டித்து இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியார் தவெக அரசை சரமாரியாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

Mayor Priya

சரியான பதில் இல்லை

எல்லாருக்கும் எல்லாம் என்று அரசு இருக்க வேண்டும் என்று தான் எங்களுடைய கழக தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்கும்போதே கூறினார். 2021-இல் பதவி ஏற்ற போது எனக்கு வாக்களித்தவர்களுக்கும், எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் பணியாற்றுவேன் என்று சொன்னவர் தான் எங்கள் தலைவர்.

ஆனால் தவெக அரசு பொறுப்பேற்ற உடனேயே கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் நிதி பணிகளை ரத்து செய்து உள்ளனர். இந்த பணிகளை ரத்து செய்ததற்கான காரணம் என்ன என கேட்டால் அதற்கான பதில் அவர்களிடம் இல்லை. இன்னைக்கு வேளச்சேரி பகுதியில் கிட்டத்தட்ட ரூ.310 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து சட்டசபையில் முன்னாள் அமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால் இந்த மேம்பால பணியை அவர்கள் நிறுத்தி இருக்கிறார்கள்.

பணிகளை எல்லாம் நிறுத்துகிறார்கள்

அதே போன்று வடசென்னை கொடுங்கையூர் பகுதியில் மேம்பால பணிகள் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது அதையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, பணி செய்ய உள்ள நிலையில் மொத்த திட்டத்தையும் ரத்து செய்துவிடுகிறார்கள். சரி நிர்வாக காரணங்களால் ரத்து செய்கிறார்கள் என்றால் தற்போது அந்த திட்டத்தை அவர்கள் கொண்டு வந்து இருக்களாமே..

இன்னைக்கு 5 மாதம் ஆகிட்டு.. ஆனால் இதுவரை ரத்து செய்த திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு வந்து மாநகராட்சி சார்பில் சிறு சிறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நிதி பற்றாக்குறை என்று சொல்லி எல்லாத்தையும் நிப்பாட்டி வைத்துள்ளார். முன்பு ஆட்சியில் இருந்த மு.க ஸ்டாலின் சென்னைக்கு என தனியாக நிதி ஒதுக்கி கொடுத்தார்.

கூட்டமே நடத்தவில்லை

கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் யாரும் இந்த மாமன்ற கூட்டத்திலே கருப்பு உடை அணிந்து போராடியதே இல்லை. கருப்பு உடை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. அதிமுகவினர் இருந்தாங்க, கம்யூனிஸ்ட், விசிக என எல்லா கட்சிக்காரர்களும் இருந்தாங்க. ஆனால் ஒரு நாளும் கருப்பு உடை அணிந்ததே இல்லை. ஆனால் இந்த தவெக ஆட்சியில் கருப்பு உடை அணியும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்போது மேற்கொள்வார்கள். ஜூலை மாதமே எடுத்து இருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஜூன் மாதமே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் செப்டம்பர் மாதம் தான் மேற்கொள்ளப்பட்டது. அதே போன்று ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் போது நிறைய கூட்டங்கள் போட்டு என்ன செய்ய வேண்டும் என சொல்வார்கள். ஆனால் இப்போது கூட்டம் எதுவுமே நடக்கவில்லை. நேற்று தான் ஒரு கூட்டம் நடத்தினார்கள்.

படம் பார்க்க போர் அடிக்காதா?

இந்த கூட்டத்திற்கு நானும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் வந்து இருந்தார். இந்த கூட்டத்தில் மக்கள் என்னென்ன பிரச்சினைகள் சந்திக்கிறார்கள் என்று முன் வைக்கும் போது அதில் தவெக எம்.எல்.ஏ தாமு போர் அடிக்குது என கூறுகிறார். எப்படிங்க மக்கள் பணி செய்யும் ஒருவர் மக்கள் பிரச்சினையை சொல்லும்போது எப்படி இப்படி சொல்ல முடிகிறது. நீங்க என்ன தியேட்டரிலா இருக்கீங்க.. போர் அடிக்குறது என்று சொல்வது கண்டிக்கத்தக்க விஷயம்.

போர் அடிக்குது என்றால் நீங்க அந்த கூட்டத்திற்கு வந்திருக்கவே கூடாது. ஒரு தியேட்டரில் மட்டும் நீங்க 3 மணி நேரம் அமர்ந்து படம் பார்க்க முடியுது அல்லவா.. எங்க தலைவர் படம், எங்க அண்ணன் படம் என சொல்லிக்கொண்டு பார்க்க முடிகிறது அல்லவா.. ஆனால் வாக்களிச்ச மக்களுக்காக உங்களால் 3 மணி நேரம் மீட்டிங்கில் உக்காந்து காது கொடுத்து கேக்க முடியாதா?.. அந்த அளவுக்கு தான் நீங்க பொதுமக்களுக்கு பணியாற்ற வந்து இருக்கீங்களா.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+