மருந்து தட்டுபாடு என்பது மாயை..104ல் புகார் சொல்லுங்கள்..அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். மருந்து தட்டுபாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. பெருநகர காவல்துறை சென்னை மருத்துவக்கல்லூரி இணைந்து மினி மாரத்தான் ஏற்பாடு செய்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது என்று கூறினார்.

கஞ்சா ஒழிப்பு
169 டன் பான்பாரக் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலும் ஒளிக்கப்பட்டுள்ளது என்றும் அண்டை மாநிலங்களிருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 32 கிடங்குகளில் எவ்வளவு மருந்துகள் உள்ளன என்பதை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் 104 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மருந்துகள் இருப்பு உள்ளன
327 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் அவை தமிழ்நாட்டில் போதிய அளவில் உள்ளன. மாவட்டந்தோறும் மருந்து கிடங்கு என தமிழ்நாடு முழுவதும் கிடங்குகள் அமைக்கப்படுகின்றன. IV fluids மருந்துகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மை. உக்ரைன் போர் காரணமாக மருந்து அடைக்கப்படும் குப்பிகள் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. அது உடனே சீர் செய்யப்பட்டது.

104 எண்ணில் புகார் கூறலாம்
மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என புகார் இருந்தால் 104 உதவி எண்ணில் அழைக்கலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மருந்து இல்லை என்று கூறினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மருந்து தட்டுபாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications