சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீர்நிலை ஆக்கிரமிப்பு.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளை கட்டிடங்கள் இடிப்பு.. போலீஸ் குவிப்பு

நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்களை தாங்களாகவே அகற்றிக்கொள்வதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு சொந்தமான அடிகளார் திருமண மண்டபத்தில் ஒரு பகுதியை, தாங்களாகவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியை கோயில் நிர்வாகம்அகற்றி கொள்ள உத்தரவாதம் அளித்துள்ளனர்.

Recommended Video

    நீர்நிலை ஆக்கிரமிப்பு.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளை கட்டிடங்கள் இடிப்பு..

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, வணிக பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன.

    நேரா பாஜகவுக்குத்தான் ஸ்கெட்ச்! ஒரே கல்லில் நேரா பாஜகவுக்குத்தான் ஸ்கெட்ச்! ஒரே கல்லில்

    இவற்றில் ஒரு சில கட்டிடங்கள் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    உயர்நீதிமன்றம்

    உயர்நீதிமன்றம்

    உயர் நீதிமன்றத்தில் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில், ``மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு சொந்தமான மேல்மருவத்தூர் ஏரியில் அடிகளார் திருமண மண்டபத்தின் ஒருபகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரியிலேயே கார் பார்க்கிங், கட்டணக் கழிப்பிடம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்டவை வருவதால் அடிகளார் திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்று பெறவில்லை.

    திருமணமண்டபம்

    திருமணமண்டபம்

    அந்த திருமண மண்டபம் பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சோத்துப்பாக்கம் நீர்நிலைகளில் வீடுகளும் கடைகளும் கட்டப்பட்டிருக்கின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பழைய நிலைக்கு நீர்நிலைகளைக் கொண்டு வரவேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

     இடிக்க உத்தரவு

    இடிக்க உத்தரவு

    இதையடுத்து பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து ராஜாவுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் நீர் நிலைகளை அகற்றுவதற்காகத் தீவிரமாக அவர் போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த 22.03.22 அன்று மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏப்ரல் மாதத்திற்குள் இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே இருந்தனர்.

    உயர்நீதிமன்றம் அதிரடி

    உயர்நீதிமன்றம் அதிரடி

    இந்நிலையில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பாக ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்க கோரி மனு செய்தனர். ஏற்கெனவே பிறப்பித்த நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை இடிக்காத காரணத்தினால் ஜூன் 10-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை இடித்துவிட்டு, 15ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்பிற்கு உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது.

    திருமண மண்டபத்தை அகற்ற உத்தரவு

    திருமண மண்டபத்தை அகற்ற உத்தரவு

    அதன்படி, ஜூன் 8ஆம் தேதி மேல்மருவத்தூர் ஏரி நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு உள்ள 13 குடியிருப்பு வீடுகள் மற்று அடிகளார் திருமண மண்டபத்தின் சில பகுதிகளை அகற்றச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் காரணத்தால் எட்டாம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் இருந்தது.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    இந்நிலையில் இன்று காலை, செய்யூர் தாசில்தார் சகுந்தலா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்திருந்தனர். மூன்று ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் உதவியுடன் கொண்டுவந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

     ஆதிபராசக்தி சித்தர் பீடம்

    ஆதிபராசக்தி சித்தர் பீடம்

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு சொந்தமான அடிகளார் திருமண மண்டபத்தில் ஒரு பகுதியை, தாங்களாகவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியை கோயில் நிர்வாகம்அகற்றி கொள்ள உத்தரவாதம் அளித்துள்ளனர். தற்போது மேல்மருவத்தூர் கோவில் சொந்தமான பகுதிகள் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை நாளில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று அதிகாரிகளுடன் கோவிலுக்கு வந்த பக்தர்களும் சூழ்ந்து கொண்டு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Melmaruvathur Commercial complexes occupied by water bodies, houses demolished. The temple administration has guaranteed the removal of a part of the Adigalar wedding hall owned by the Melmaruvathur Adiparasakthi Foundation, which they have occupied themselves.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X