தமிழ் வழியில் படித்து கலெக்டரான ஏஞ்சலின். திமுக எக்ஸ் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது கலெக்டராகி சாதித்திருக்கிறார் நம் தமிழகத்தின் ஏஞ்சலின் ரெனிட்டா. தஞ்சை மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ் வழியில் படித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார் என்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திமுக முன்னாள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இனிகோ இருதயராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது கலெக்டராகி சாதித்திருக்கிறார் நம் தமிழகத்தின் ஏஞ்சலின் ரெனிட்டா.

Michaelpatti s Angelin Becomes Collector dmk ex mla Inigo Irudayaraj Extends Congratulations

தஞ்சை மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ் வழியில் படித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். இதன் மூலம் தமிழுக்கும், நம் தமிழகத்திற்கும் அவர் பெருமை சேர்த்திருக்கிறார்.

ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதை தனது 7 வயது முதலே லட்சியமாகக் கொண்டு படிப்பை இறுகப்பற்றி இருக்கிறார் ரெனிட்டா. அதற்காக மிகக் கடுமையான முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

தனது சொந்த கிராமத்தில் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் பயின்ற இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப் பாசன பொறியியல் பிரிவில் படித்து முடித்தார். அதில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துக் காட்டினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வில் முதல் முயற்சியிலேயே அவர் வெற்றி பெற்றார். இந்திய அளவில் 338 வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானார். அதன் பிறகு அவர் மணிப்பூர் மாநிலத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அங்கு பணியில் அமர்த்தபட்டார்.

அந்த மாநிலத்தில் உள் துறை இணைச்செயலாளர், மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் போன்ற முக்கிய பொறுப்புகளில் ஏஞ்சலினா திறம்பட பணியாற்றினார். அவரது சிறப்பான நிர்வாகத் திறமையை பாராட்டி மணிப்பூர் அரசு தற்போது ஏஞ்சலின் ரெனிட்டாவை காக்சிங் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் மதுரை மண்ணின் மைந்தரான பாண்டியன், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலும், பல்வேறு துறைகளின் செயலாளர் பொறுப்பிலும் திறம்பட பணியாற்றி அந்த மாநிலம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்தார். இதன் மூலம் பாண்டிய நாட்டு மீன் கொடியை ஒடிசாவில் பறக்க விட்டு அந்த மாநிலமெங்கும் அவர் தமிழ் மணம் கமழச் செய்தார்.

அதே பாதையில் தற்போது ஏஞ்சலின் ரெனிட்டாவும் தனது தடத்தை பதிவு செய்திருக்கிறார். ஒரு சாதாரண குக்கிராமத்தில் தமிழ் வழியில் படித்து மிக இளம் வயதிலேயே மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் தஞ்சை மண்ணின் இந்த தமிழச்சிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் மலைபோல் குவிந்து வருகின்றன. ஏஞ்சலின் ரெனிட்டா என்ற அந்த சாதனை நாயகிக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நானும் எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். அரசு நிர்வாகத்துறையில் ஏஞ்சலினா மேலும் பல சிகரங்களைத் தொட மனதார வாழ்த்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+