சென்னையில் மீண்டும் ஒரு ஜில் ஜில் மழை.. ஆங்காங்கே.. மக்கள் செம ஹேப்பி!
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவகாற்று வலுத்துள்ளதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செ.மீ. மழையும், பெரியாறு அணை, நடுவட்டம், வால்பாறை ஆகிய இடங்களில் தலா செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை நான்கு சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். தற்போதைய பதிவுப்படி 2.4 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது மழையின் அளவு 37 சதவீதம் குறைந்துள்ளது.

கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், மக்கள் தவித்து போகினர். நேற்று முன்தினம், கொஞ்சம் மழை பெய்தது. மக்கள் மனதை நனைத்தது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை தற்போது, கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. 4 ஏரிகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துட்டது. தலைநகர் சென்னையை போல், மற்ற மாவட்ட மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவுவதால், மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர்.
-
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications