தனியார் பள்ளிகளில் தான் அதிக தற்கொலை! காரணம் என்ன தெரியுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன விளக்கம்!
சென்னை : அதிகம் தனியார் பள்ளி மாணவர்கள் தான் தற்கொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் எனவும், அதிக அழுத்தம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வைத்து பள்ளியை பேனர் வைத்து விளம்பரபடுத்துவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், பள்ளி கல்வித்துறையில் மாணவர்களின் நலன் குறித்தும், மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
கடந்த சில வாரங்களில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய மண்டலங்களில் ஆய்வுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் சென்னை மண்டலத்தில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ,"தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியரை அழைத்து கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தினார்.

போதிய நடவடிக்கை
மாணவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடற்கல்வி நேரத்தை தவிர்க்காமல் விளையாட வைக்கப்படுகிறார்களா என கண்காணிக்க வேண்டும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாக்கும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும், சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள பள்ளிகள் மாநகராட்சியோடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளில் தற்கொலை
ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளி கட்டமைப்பை சீரமைக்க 400 கோடி ஒதுக்கி மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிகம் தனியார் பள்ளி மாணவர்கள் தான் தற்கொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அதிக அழுத்தம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வைத்து, பள்ளியை பேனர் வைத்து விளம்பரபடுத்துவதால் தான் இது போன்று ஏற்படுகிறது.

மாணவர்களுடன் சந்திப்பு
பள்ளி மாணவர்களிடம் திடீரென சென்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சென்று பேசுங்கள். அதை வைத்து கலந்தாலோசிக்க வேண்டும். மாணவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். அதிக ஆய்வுகளை பள்ளிகளில் மேற்கொள்ளுங்கள்" என பேசினார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications