சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் எழுதிய மாணவர்களின்.. மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம்.. அமைச்சர் மா.சு தொடங்கி வைத்தார்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்குத் தொலைப்பேசி வழியே ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் மூலமே நிரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்குள்ள அனைத்து கட்சிகளும் முன் வைத்துள்ளன.

 நீட்: எடப்பாடி காட்டிய ஆ.ராசாவின் 'அயோக்கியத்தனம் பேச்சு' பக்கா எடிட்டிங்- அம்பலப்படுத்தியது திமுக! நீட்: எடப்பாடி காட்டிய ஆ.ராசாவின் 'அயோக்கியத்தனம் பேச்சு' பக்கா எடிட்டிங்- அம்பலப்படுத்தியது திமுக!

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை

இருப்பினும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தர முடியாது என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது. இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதினர். நீட் தேர்வு நடைபெற்ற அன்று காலை அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அதேபோல நீட் எழுதிய பிறகு, குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக நிகழும் மாணவர் தற்கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே தற்கொலைகள் நடைபெறுகின்றன.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இந்நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, அவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இன்று காலை 10.30 மணியளவில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ தகவல் மற்றும் மன நல ஆலோசனை மையத்தில் (104 call centre) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Recommended Video

    தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்
    நீட் விலக்கு தீர்மானம்

    நீட் விலக்கு தீர்மானம்

    முன்னதாக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் கடந்த திங்கள்கிழமை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை அளித்தன. அதேநேரம் நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu govt launches a new scheme to provide phone counseling to NEET students. Ma Subramanian latest news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X