சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இனியாவது தொண்டர்கள் கவனமா இருங்க": அமைச்சர் பாண்டியராஜன்

உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும் திமுகவில் வாழ்த்து சொல்லவில்லை... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகவே உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவிட்டார்" " என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மீது சில தினங்களுக்கு முன்பு ஒரு வழக்கு பதிவானது.. அதாவது "அறிவாலயத்தில் கொடி ஏற்றும்போதும், இறக்கும்போதும், ஸ்டாலின் மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை... கையில் கிளவுஸ் போட்டிருந்தார்.

தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்" என்று கமிஷனர் ஆபீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரை தந்தது அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்எம் பாபு முருகவேல்!

தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு..? தகுதியானவர்களை தலைமை தேர்வு செய்யும் -உதயநிதி தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு..? தகுதியானவர்களை தலைமை தேர்வு செய்யும் -உதயநிதி

விஜயகாந்த்

விஜயகாந்த்

இது தொடர்பாக நேற்று முன்தினம் பிரேமலதா விஜயகாந்த்தும் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.. "ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுகூட தெரியவில்லை.. ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

 சுதந்தி தினம்

சுதந்தி தினம்

இதே பிரச்சனையை மறுபடியும் அதிமுக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கிளப்பி உள்ளார்.. இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த வருஷம் அதிசயமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடியேற்றினார்... கொடியேற்றியதும் கொடிக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்பது மரபு.

 அவமதிப்பு

அவமதிப்பு

ஆனால், ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு அப்படியே போய்விட்டார். தேசியக் கொடிக்கு மிகப்பெரிய அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது... இதுவரை திமுக அலுவலகத்தில் தேசிய கொடி ஏத்தினதே இல்லை... எனக்கு தெரிந்து ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி நான் பார்த்ததும் இல்லை... அவர் ஸ்கூல் படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்பதால், தேசியக் கொடி பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்... அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, அதனை காவல் துறை மேற்கொள்ளும்" என்றார்.

 பண்டிகைகள்

பண்டிகைகள்

உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்.. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும் திமுகவில் வாழ்த்து சொல்லவில்லை... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகவே உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவிட்டார்.. திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது.. இனியாவது தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்" என்றார்.

English summary
minister Mafoi Pandiyarajan criticised Udhayanithi Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X