அப்செட்! வெளியேறிய ஆளுநர்.. இந்தியில் முழங்கிய பாஜக எம்எல்ஏக்கள்! தமிழை காப்போம் என அமைச்சர் ட்வீட்
சென்னை: இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் பல்வேறு வரிகளையும், வார்த்தைகளையும் தவிர்த்தது சர்ச்சையாகி உள்ள நிலையில் அவர் தேசிய கீதம் பாடும் முன்பு அவையை விட்டு வெளியேறியபோது இந்தியில் பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதலில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு அரசின் நோக்கம், செயல்பாடுகள், வளர்ச்சித் திட்டங்கள் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில், அரசு குறிப்பிட்டு இருந்த தகவல்களை படித்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்ததாக திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பாமகவும் குற்றச்சாட்டி இருக்கிறது.

திஸ் கவர்மெண்ட்
தமிழ்நாடு என்று சொல்லாமல் திஸ் கவர்மெண்ட் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததாகவும், தமிழ்நாடு திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தமிழ்நாடு அரசு குறிப்பிட்டு இருந்த பெரியார், அண்ணா, கலைஞர், சுயமரியாதை போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு பத்தியே காணோம்
இதில் "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது." என்ற பத்தியையே ஆளுநர் ரவி படிக்கவில்லையாம்.

அப்பாவுவின் தமிழ் உரை
அதேபோல், குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டு வருவதால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற குறிப்பையும் ஆளுநர் ரவி வாசிக்காமல் விட்டுள்ளார். ஆளுநர் உரைக்கு பிறகு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரையில் இடம்பெற்ற பல வாசகங்களும், வார்த்தைகளும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் தீர்மானம்
சபாநாயகர் உரை முடிந்த பிறகு ஆளுநர் ரவி முன்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி படிக்காதது தவறு." என்று கண்டித்தார். ஆளுநர் ரவி தாமாக முன்வந்து வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாது என்றும் அரசு கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தேசிய கீதத்துக்கு முன் வெளியேறிய ஆளுநர்
சட்டப்பேரவையில் தன்னுடைய பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேராக கண்டனம் தெரிவித்ததால் தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர், அமைச்சர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "சட்டமன்ற மரபுகளை மீறிய ஆளுநர், தேசிய கீதம் பாடும் முன்பு அவையை விட்டு வெளியேறினார். இந்தியில் பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கம். அன்னை தமிழை, தமிழ்நாட்டை காப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார். ஆளுநர் வெளியேறியபோது பாஜக எம்.எல்.ஏக்கள் பாரத் மாதா கி ஜே என முழங்கியதையே அமைச்சர் இந்தி என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications