சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விசாரணை கமிஷன்.. அதிமுகவை அதிரவைத்த அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு !

Google Oneindia Tamil News

சென்னை: மழைநீர் வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான். உப்பை திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

Recommended Video

    விசாரணை கமிஷன்.. அதிமுகவை அதிரவைத்த அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு !

    சிம்ஸ் - எஸ்.ஆர்.எம் மருத்துவ நிறுவனம் சார்பில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

    அதன்பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிம்ஸ் - எஸ்.ஆர்.எம் மருத்துவ நிறுவனம் சார்பில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    ராஜகண்ணுவ வச்சி கோடி கோடியா சம்பாதிக்கறீங்க.. கேட்டா லட்சத்தை கொடுக்கறீங்க.. காயத்ரி கேள்வி ராஜகண்ணுவ வச்சி கோடி கோடியா சம்பாதிக்கறீங்க.. கேட்டா லட்சத்தை கொடுக்கறீங்க.. காயத்ரி கேள்வி

    செவிலியர்

    செவிலியர்

    சபரி மலை அடிவாரத்திற்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், இரண்டு மாத காலத்திற்கு சபரிமலைக்கு வரும் தமிழ்நாட்டு பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர் 3 செவிலியர் உட்பட ஒரு மருத்துவ குழு சிகிச்சைக்காக இருக்கும்.

    நீதிமன்ற உத்தரவு

    நீதிமன்ற உத்தரவு

    இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக அமையும். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரி தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக பின்பற்றுவோம். சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சி தமிழகத்தின் முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    தடுப்பூசி முகாம்

    தடுப்பூசி முகாம்

    சபரி மலை செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்த உத்தரவிட பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சபரி மலையில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் அந்த முகாம்களை பயன்படுத்தி சான்றிதழ்களை வாங்கி கொள்ளலாம்.

    சரியானது தான்

    சரியானது தான்

    சென்னையை சிங்கப்பூர் ஆக்கினோம் என தேர்தல் சமயத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கூறினார். ஆனால் பருவமழைக்கு சென்னை நகரம் தத்தளித்தது. கடந்த காலங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதி எங்கே? இதற்கு பதில் இல்லை. வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிசன் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான். உப்பை திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்" அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சிம்ஸ் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அஸ்வின், துணை தலைவர் டாக்டர் ராஜு கலந்துக் கொண்டனர்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், "அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. மழை நீர் வடிகால் அமைத்ததில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமி‌ஷன் அமைத்து கண்டுபிடிப்போம்" என்றார்.

    மறுத்த ஓபிஎஸ்

    மறுத்த ஓபிஎஸ்

    இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்- அமைச்சரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அவர் கூறுகையில், 'தி.மு.க. அரசு மழை நீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்' என்றார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தான் அமைச்சர் சேகர்பாபு, . வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிசன் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான். உப்பை திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

    English summary
    The Chief Minister MK Stalin was right when he said that he would set up a commission of inquiry into the rainwater drainage facility, Minister P K Sekar Babu said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X