சென்னை அயனாவரத்தில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அயனாவரத்தில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தவெக நிர்வாகி மதன்ராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் வழக்கு பதிவு எதுவும் செய்யாமல், வெறும் மன்னிப்பு கடிதம் மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என அவர்கள் 3 பேரையும் விடுவித்ததாகவும், உயர் அதிகாரிகள் தலையிட்ட பிறகே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை பூக்கடை பகுதியில் நேற்று முன் தினம் திருப்பதி திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு, பெரியமேடு, அயனாவரம் வழியாக திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அயனாவரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் திருப்பதி திருக்குடை ஊர்வலம் அப்பகுதியை கடந்து சென்றதும் வீட்டுக்கு புறப்பட்டார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது இளைஞர்கள் 3 பேர் அந்த வழியாக செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

Ayanavaram

இதை பார்த்த பெண் போலீஸ் அவர்களை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் பெண் போலீசை அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி மிரட்டினர். இதையடுத்து பெண் போலீஸ் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் அங்கு வந்து பெண் போலீசை மிரட்டிய நபர்களை கண்டித்தார். இதில் அவரையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இது உயர் அதிகாரிகளுக்கும் தெரியவர அவர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதில் பெண் போலீசிடம் ரகளையில் ஈடுபட்டது தவெக நிர்வாகி மதன் ராஜ், மேலும் வழக்கறிஞர் ஒருவர் என்பதும், இன்னொருவர் சட்டத்துறை மாணவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மதன்ராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் பெண் போலீஸ் புகார் கொடுத்த பிறகும் வழக்குப் பதிவு எதுவும் செய்யாமல் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டுவிட்டு செல்லும் படி போலீசார் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்தே உயர் அதிகாரிகள் சொன்ன பிறகே 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் குறித்து அவதூறு பரப்பினால் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை செய்யப்படும் என தவெக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், இவ்விவகாரத்தில் பெண் போலீஸ் புகார் அளித்தும் முதலில் நடவடிக்கை எடுக்காதது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+