டெல்லியில் இளைஞர்கள் கைது.. ஸ்டாலின் கண்டனம்.. திமுக சட்ட உதவி வழங்கவும் தயார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்குத் திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எத்தனை போராட்டக்காரர்களை பாஜக அரசால் கைது செய்ய முடியும் என்றும், எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன.

mk-stalin-condemns-arrest-of-youth-protesters-in-delhi-questions-bjp-over-suppression-of-voices

சிஜேபி நிர்வாகிகள் கைது

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, ஜந்தர் மந்தருக்குள் அனுமதியின்று அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 5 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் கண்டனம்

இதுகுறித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: போராட்டக்காரர்களை எத்தனை பேரை பாஜக அரசால் கைது செய்ய முடியும். இளைஞர்களின் குரலை எத்தனை காலம் ஒடுக்க முடியும். இளைஞர்களைச் சிறையில் அடைக்க அடைக்க, எந்த அரசியல் கட்சியையும் சாராத சாதாரண குடிமக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள். மக்களின் உண்மையான சக்தியை அவர்கள் உணர்த்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சட்ட உதவி

மேலும், அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+