சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக காலத்தில் இல்லாத வன்முறையா.. முதல்வர் மீதான விமர்சனத்துக்கு தெறிக்கும் எதிர்ப்பு குரல்கள்

முதல்வரை விமர்சித்து பேசியுள்ளார் திமுக தலைவர்

Google Oneindia Tamil News

சென்னை: "சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முதல்வர் முக்கிய கவனம் செலுத்துகிறாரா?" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சௌகார்பேட்டை கொலை சம்பத்தின் அதிர்ச்சி இன்னும் தமிழக மக்களை விட்டு அகலவில்லை.. ஒரு பெண் துப்பாக்கியால் 3பேரை இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றுள்ளார்.

இது சம்பந்தமாக 3 பேர் கைதாகி உள்ளனர்.. அவர்கள் வாக்குமூலத்தில், காட்டூர் கிராமத்தில் தங்கி துப்பாக்கி பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும், கள்ளச் சந்தையில் சில துப்பாக்கிகளை வாங்கி வந்து சத்தம் குறைவாக கேட்கும் துப்பாக்கியை வைத்து பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

உழைத்தது போதும்... ஆளை விடுங்க சாமி... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்..!உழைத்தது போதும்... ஆளை விடுங்க சாமி... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்..!

 வடமாநிலமா?

வடமாநிலமா?

அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவர் துப்பாக்கியால் கொல்லலப்பட்டுள்ளார்.. பழனியில் 2 பேர் துப்பாக்கி சூட்டில் காமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள்.. அதாவது இந்த ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. இதுகுறித்து திமுக தலைவர், இது தமிழகமா? வடமாநிலமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 கலாச்சாரம்

கலாச்சாரம்

"தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத்துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய் விட்டன... காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய கவனம் செலுத்துகிறாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலின் எழுப்பிய இதே கேள்வி பொதுமக்கள் மனதிலும் எழுந்துள்ளதை மறுக்க முடியாது.. வடமாநிலங்களில் இருந்து யார் வந்தாலும், அப்படியே அவர்களை உள்ளே அனுமதித்துவிடுவதா? செக்போஸ்ட்களில் எதையும் போலீசார் சரியாக ஆராய்வதில்லையா? என்ற கேள்விகளும் முன்னிறுத்தப்படுகின்றன. காவல்துறையை கையில் வைத்தப்பது முதல்வர் என்பதால், கமல் முதல் ஸ்டான் வரை இந்த கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.

 தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

அதேசமயம், திமுக இதை ஏன் அரசியலாக்குகிறது என்றும் சிலர் கேட்கிறார்கள்.. துப்பாக்கி கலாச்சாரம் என்பது, ரவுடிகள் துப்பாக்கி மூலம் பொது மக்களை அச்சுறுத்துவது, அதாவது தீவிரவாதிகள் துப்பாக்கிகளை பொது மக்கள் மத்தியில் பயன்படுத்தி அவர்களை நிலைகுலைய வைப்பது.. மற்றபடி குடும்ப பிரச்சினை, தொழில் பிரச்சினைகள் காரணமாக நடந்தவை எல்லாம் எப்படி துப்பாக்கி கலாச்சாரத்தில் சேரும்? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

 அட்டாக் பாண்டியன்

அட்டாக் பாண்டியன்

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இல்லாத அட்டூழியமா? அட்டாக் பாண்டினை மறக்க முடியுமா? இதயவர்மன் துப்பாக்கி வைத்திருந்தபோது வராத கோபம் இப்போது மட்டும் ஏன் வருகிறது? என்பன போன்ற கேள்விகளும் திமுகவுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது.

 கோரிக்கை

கோரிக்கை

அதற்காக நடந்து வரும், கொலைகளை நியாயப்படுத்த முடியாது.. திமுக, அதிமுக எந்த அரசாக இருந்தாலும், தமிழகத்தை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக வைத்திருப்பதில்தான் அதன் மொத்த திறனும், செயல்பாடும் அடங்கி உள்ளது.. அந்த வகையில், துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது!

English summary
MK Stalin condemns Gun Culture in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X