Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் எடுத்த புதிய முன்னெடுப்புகள்.. விமர்சனங்களும்.. வரவேற்புகளும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திடீரென சென்று ஆய்வு நடத்தும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த புதிய முன்னெடுப்புகள், உண்மையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சிலர் இதனை சமூக வலைதளங்களில் விமர்சனமும் செய்கிறார்கள். ஆனால் நிர்வாக ரீதியாக ஸ்டாலின் நடத்தும் புதிய ஆய்வுகள், எதையும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எது செய்தாலும் அது தலைப்பு செய்தியாகும் என்பது உண்மை தான். அவர் காரில் செல்லும் போது கார் டயர் பஞ்சர் ஆகி, அவர் மாற்று காரில் சென்றால் கூட அது பெரிய செய்தியாக பேசப்படும் காலம் இது. ஏன் முதல்வர் காலையில் வாக்கிங் போனால் கூட, ஊடகங்களில் அது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

மத்திய அரசிடம் , தமிழகத்திற்கு வேண்டிய நிதிகளை கேட்டு பெறுவது, துறை வாரியான கோப்புகளிளை ஆராய்ந்து கையெழுத்து போடுவது, புதிய திட்டங்களை உருவாக்கி அதற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவது, பொதுமக்களின் மிக முக்கியமான பிரச்சனைகளில் தலையிட்டு சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது என நாள்தோறும் ஏராளமான வேலைகளும் பொறுப்புகளும் முதல்வராக இருப்பவர்களுக்கு உள்ளது.

சிறப்பான பணி

சிறப்பான பணி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வேலைகளை சிறப்பாகவே செய்து வருவதாக பலரும் பாராட்டுகிறார்கள். இந்தசூழலில் மேல்மட்டத்தில் மட்டுமின்றி அடிமட்டத்திலும் அதிகாரிகள் பணிகளை சிறப்பாக செய்தால் அரசின் சேவைகள் சரியான முறையில் சாமானிய மக்களை சென்றடையும். வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டால் போதாது. அதை நேரடியாக கண்காணிக்கவும் வேண்டும். இதை சொன்னது வேறு யாரோ அல்ல.. முதல்வர் ஸ்டாலின் தான்.

மாதம் மாதம்

மாதம் மாதம்

அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பேசும், வெறும் அறிவிப்புடன் நின்றுவிடாமல் நானே நேரடியாக களம் இறங்கி ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து முடிக்க உத்தரவிடுவேன் என்றார். மேலும் துறைவாரியாக மாதம் மாதம் கண்காணிப்பேன் என்றும் கூறியிருந்தார். அவர் கூறி ஒரு மாதம் தான் ஆகி இருக்கும். அடுத்த 30 நாளிலேயே மாவட்ட வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு நாளாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் வருகை

ஸ்டாலின் வருகை

நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் தனது ஆய்வு பணியை முடித்துக்கொண்டு தர்மபுரி மாவட்டம் தெற்கு செல்லும் வழியில் திடீரென்று வாகனத்தை நிறுத்தச் சொல்லி வழியில் அமைந்துள்ள B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கு பணியிலிருந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குகளின் பதிவேடுகள் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மாணவர் விடுதி

மாணவர் விடுதி

இதை பார்த்து மாவட்ட அதிகாரிகள் ஒரு கனம் நடுங்கித்தான் போனார்கள். அதன்பிறகு உஷாரான அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் சுறுசுறுப்பாக மாறினார்கள். மறுநாள் காலை தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலிலும் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மாணவர்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார். மேலும் அங்கிருந்த மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளில் மாநிலத்தின் முதல்வரே நேரில் ஆய்வு செய்தது அண்மைக்கால வரலாற்றில் தெரியவில்லை. இந்த முன்னெடுப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.

கொண்டாடப்படுவார்

கொண்டாடப்படுவார்

இதை சிலர் விமர்சனங்கள் செய்யாமல் இல்லை. ஆனால் இது மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளை சுறுசுறுப்பாக்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. முதல்வர் எப்போது வருவோரா என்று அச்சத்தில் அதிகாரிகளும், சுத்தமாக காவல் நிலையங்களை, ரேஷன் கடைகளை, அந்த ஊர் சாலைகளை பராமரிப்பார்கள். மேலும் துறைவாரியாக பணிகளும் சிறப்பாக நடக்கும். அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் திடீரென ஏதாவது குக்கிராமங்களுக்கு சென்றால் உண்மையிலேயே கொண்டாடப்படுவார்.

ஸ்டாலின் முன்னெடுப்பு

ஸ்டாலின் முன்னெடுப்பு

ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். உதாரணமாக கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் பாலம் கட்டியதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட குறைந்த நிதியில் பாலம் கட்டி மீதமுள்ள பணத்தை அரசிடம் ஒப்படைத்தவர் ஸ்டாலின். உள்ளாட்சி நிர்வாகத்தில் ஸ்டாலின் செய்த முன்னெடுப்புகள் பல இன்றும் பேசப்படுகிறது. அதுபோல் திடீர் ஆய்வு முயற்சி அடிக்கடி தொடர்ந்தால் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+