திமுக ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: மு.க.ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தின் போது பேசியதாவது:
சி.ஏ.ஏ, விவசாய சட்டங்களை எதிர்த்து திமுக பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தியது. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதியிடம் கொடுத்தோம்.

சிறுபான்மையினருக்கு குரல்
திமுகதான் ஆட்சிக்கு வரப் போகிறது. அது உறுதியான ஒன்று. திமுக ஆட்சிக்கு வந்த உடன் சி.ஏ.ஏ. சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்பது இந்த ஸ்டாலின் தரும் உறுதி மொழி. திமுகவுக்கும் சிறுபான்மையினருக்குமான உறவு என்பது தொப்புள் கொடி உறவு. எப்போதும் சிறுபான்மை சமூகத்துக்காக திமுக குரல் கொடுக்கும்.

விவசாய சட்டங்களுக்கு அதிமுக-பாமக ஆதரவு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, ஒழிக்க கொண்டுவரப்பட்டவைதான் 3 விவசாய சட்டங்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டவை விவசாய சட்டங்கள். இந்த விவசாய சட்டங்களை ஆதரித்ததும் அதிமுக, பாமக எம்.பி.க்கள்தான். ஆனால் தேர்தல் அறிக்கையில் விவசாய சட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என சொல்கிறது அதிமுக..

பச்சை துண்டு போட்டால்....
அதிமுக, பாமக வாக்களிக்காமல் இருந்தால் விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது. டெல்லியில் இன்று 124-வது நாளாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். போராடும் விவசாயிகளை புரோக்கர் என்று சொன்னவர் முதல்வர் பழனிசாமி. தம்மை அடிக்கடி விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி ஒரு விஷவாயு. பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் விவசாயியா? பச்சை துரோகி.

பச்சை துண்டு போட்டால்....
அதிமுக, பாமக வாக்களிக்காமல் இருந்தால் விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது. டெல்லியில் இன்று 124-வது நாளாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். போராடும் விவசாயிகளை புரோக்கர் என்று சொன்னவர் முதல்வர் பழனிசாமி. தம்மை அடிக்கடி விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி ஒரு விஷவாயு. பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் விவசாயியா? பச்சை துரோகி.

சட்டசபையில் தீர்மானம்
இன்று தேர்தல் வந்துவிட்டதால் விவசாய சட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தவறான வாக்குறுதியை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். 3 விவசாய சட்டங்களை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என பஞ்சாப், கேரளா, மேற்கு வங்க சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை பழனிசாமி தீர்மானம் போட்டாரா? இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் விவசாய சட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்படும்.

505 வாக்குறுதிகள்
தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் கொடுத்திருக்கிறோம். சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம் என்று கருணாநிதி சொல்வார். இந்த ஸ்டாலின் சொன்னதைத்தான் செய்வேன்; செய்வதைத்தான் சொல்வேன்.

எடப்பாடி தொகுதியில்..
எடப்பாடி சட்டசபை தொகுதியில் பிரசாரம் செய்தேன். அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் கூட வாங்க மாட்டார். நான் எப்போது என்ன சொல்வேன் என காத்திருந்து அறிவிப்புகளை வெளியிடுகிறவர்தான் முதல்வர் பழனிசாமி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.