Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி ஆட்சியில்தான் கொடநாடு கொடூரம் அரங்கேறியது.. வேகமாக விசாரிங்க முதல்வர் ஸ்டாலின்- புகழேந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஓபிஎஸ் -இபிஎஸ் மோதல் வெடிக்கும் போதெல்லாம் கொடநாடு விவகாரமும் பூதாகரமாக வருகிறது. இந்த சூழலில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள கொடநாடு விவகாரம் மீண்டும் உச்சத்திற்கு வந்துள்ளது.

 MK Stalin should take immediate action in the Kodanadu murder and robbery case says AIADMK former leader Pugazhendhi

அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை என்ன என்பதை தெரியப்படுத்துவேன். கொடநாட்டில் நடந்த முடி மறைக்கப்பட்ட மர்மங்களை வெளிக்கொண்டு வருவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது கூறியிருந்தார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின், கொடநாடு விவகார விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து சட்டமன்றத்திலேயே அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வரும் திங்கட் கிழமை காலை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட உள்ள நிலையில், இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமி, மகன் செந்தில்குமார் ஆகிய இருவரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொடநாடு விவகாரம் தொடர்பாக மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள். ஊழல் செய்த எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும். 4 ஆண்டுகளுக்கு முன் கொடநாடு பங்களாவில் எப்போதும் மின்சாரம் தடைபடாது, காவல்துறை பாதுகாப்பு ரத்து செய்யப்படாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது. அப்போதைய முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி தான். அதனால் கொடநாடு விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Recommended Video

    கே.பி முனுசாமி திமுகவின் கைக்கூலி.. ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு - வீடியோ

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் 2017ம் ஆண்டு, கொள்ளை நடந்தது. இதை தடுக்க முயன்ற எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+