Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் போட்ட கணக்கு.. மிஸ் ஆகாது.. முதல் ஆளாக "அவரை" தூக்கி வந்த திமுக.. மெகா பதவியும் தர போகுதாமே

மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதையுமே ஒரு காரணத்தோடுதான் முதல்வர் ஸ்டாலின் செய்வார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அந்த வகையில், கோவை மகேந்திரன் இன்று திமுகவில் இணைய உள்ளார்.. அவரை கட்சியில் இணைத்து, ஒரு முக்கிய பதவியையும் தர முதல்வர் யோசித்து வருகிறாராம்.. அந்த பதவியும் என்ன என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது..!

கோவை தொகுதியானது தொழிலாளர்கள் மண்.. இங்கு மநீம செல்வாக்கு இருந்தாலும், தொழிலதிபர்கள், இளைஞர்கள் நகர்ப்புற வாக்குகள் என்று மகேந்திரனுக்கென்றும் ஓரளவு செல்வாக்கு உள்ளது..

தனிப்பட்ட முறையில் ஓட்டு வங்கியை சுயமாகவே ஒருகுறிப்பிட்ட அளவு தக்க வைத்து கொண்டுள்ளார்.. இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்.. "பசை" உள்ள முக்கிய நபர்..!

 செயல்திட்டம்

செயல்திட்டம்

அதனால்தான், கோவைக்கான செயல்திட்டத்தை வெளியிட்டு, அதை எத்தனை நாட்களுக்குள் எப்படி செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கடந்த சட்டமன்ற தேர்தலில் மகேந்திரன் தந்திருந்தார்.. இந்த வாக்குறுதிகள் கேவை மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.

 கமல்

கமல்


மீடியா வெளிச்சத்தில் கமலுக்கு ஓட்டுக்கள் விழுந்தாலும், மய்யத்துக்கான வாக்கு வங்கியை ஓரளவு பலப்படுத்தி தந்ததில் மகேந்திரனின் பங்கும் அதிகம் என்றே சொல்லலாம்.. கடந்த எம்பி தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றார்... அதன் தொடர்ச்சியாக இந்த சட்டமன்ற தேர்தலிலும் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு 36 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.

 தோல்வி

தோல்வி

ஆனால், கமலின் அதிர்ச்சி தோல்வியால் மநீமய்யத்தில் இருந்து விலகினார்.. ஆனால், இவர் விலகிய உடனேயே மிகப்பெரிய டிமாண்ட் ஒன்று உருவாகிவிட்டது... இவரை தங்கள் பக்கம் இழுத்து கொள்ள பாஜகவும் பிளான் செய்ததாக கூறப்பட்டது.. ஆனால், வழக்கம்போல் திமுக முந்திக் கொண்டுவிட்டது..

 பலம்

பலம்

இதற்கு காரணமும் உள்ளது.. கொங்குவில் தன்னுடைய பலத்தை அதிகப்படுத்தி கொண்டு வருகிறது திமுக.. இதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிகளை எடுத்து வருகிறது.. இதில் பெரும்பங்கு செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாற்று கட்சியினரும் திமுகவில் அமைச்சர் தலைமையில் ஜாயிண்ட் ஆகி வருகிறார்கள்.

 அறிவாலயம்

அறிவாலயம்

இந்த லிஸ்ட்டில் மகேந்திரனும் இணைகிறார்.. இன்று திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்... அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் இணைகிறார்... அவர் மட்டும் இல்லை.. அவருடன், பல முன்னாள் மாநில, மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைகின்றனர்... அதாவது கிட்டத்தட்ட 50 பேரை திரட்டி கொண்டு வந்து இணைய போகிறார் மகேந்திரன்..

 தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள்

மகேந்திரனை உள்ளே கொண்டு கொங்கு தொழிலதிபர்களை கணிசமாக திமுகவுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மய்யத்துக்கு பொருளாதார ரீதியாக தாங்கி பிடித்து கொண்டிருந்த மகேந்திரன், இனி திமுகவிலும் முக்கிய பொறுப்பை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக, அவருக்கு தொழில் நிறுவனங்களில் பதவியளிக்க திமுக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. கொங்குவில் திமுகவை தூக்கி நிறுத்த மகேந்திரன் எந்த அளவுக்கு உதவுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+