சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்.. கருணாஸ் அதிருப்தி.. சி.ஆர்.சரஸ்வதி சீற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு, முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், அதிமுக கூட்டணி எம்எல்ஏவுமான கருணாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு மற்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகியோர் மீது, அக்கட்சி கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.

MLA Karunas express his displeasure over Tamil Nadu speaker notice

இந்த புகாரின் அடிப்படையில், விளக்கம் கேட்டு, 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கருணாஸ், டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இதுதான்: மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் கட்சி கொறடா, ஒரு புகார் அளித்ததின் பேரில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மூன்று பேருமே அதிமுக ஆட்சி நீடிக்கவேண்டும் என்றுதான் தாங்கள் விரும்புவதாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது முரண்பாடாக தெரிகிறது. வரக்கூடிய இடைத் தேர்தல் முடிவுகளை மனதில் வைத்துக்கொண்டு ஒருதலைபட்சமாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக, மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். எனது தனிப்பட்ட கருத்து என்பதை விட, நான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் இவ்வாறு தான் நினைப்பார்கள் என்று நான் இந்த கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

சபாநாயகர் அதிரடி.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்! சபாநாயகர் அதிரடி.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக, இப்படி ஒரு நடவடிக்கையை ஏன் எடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது. இவ்வாறு கருணாஸ் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், இடைத்தேர்தல் முடிவுகள், அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டப் போகின்றன. எனவே, எப்படியாவது தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தகுதி நீக்க அஸ்திரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது, என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே, அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அளித்த பேட்டியில், இரட்டை இலை சின்னத்தில் இந்த மூன்று பேரும் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். ஆனால், கடந்த தேர்தலில் பரிசுப் பெட்டி, சின்னத்தில் ஓட்டு போடுமாறு இவர்கள் பிரச்சாரம் செய்து உள்ளார்கள். தாங்கள் சார்ந்த கட்சியின் சின்னத்துக்கு எதிராக வேலை செய்தவர்கள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதில் என்ன உள்நோக்கம் இருந்துவிட முடியும்? கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.

English summary
MLA Karunas express his displeasure over Tamil Nadu assembly speaker's action against three Rebel AIADMK MLAs, but AIADMK justify, speaker action as all the three MLAs were indulge against party, he climbed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X