கனிம ஒப்பந்ததாரர்களுக்கு அதிர்ஷ்டம்.. மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள MMDR சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு mmdr சட்டத்தில் முக்கியமாக திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. எம் எம் டி ஆர் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.‌ இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்தது.

MMDR Amendment Bill 2026

இந்த 9டி சட்டப்பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக இனிமேல் விதிக்க முடியாது.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் விதித்த வரிகளை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும்போது, நிலுவை வரித் தொகையை அவர்கள் செலுத்தத் தேவையில்லை. கனிமங்கள், அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதை பயன்படுத்தி மத்திய அரசு கட்டுப்பாடு செலுத்தலாம் என்று என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன..

இந்த சட்ட திருத்தத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இது குறித்து திமுக எம்பி கனிமொழி ன எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள MMDR சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

2024-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்." இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+