ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜகவின் அடிமட்ட தொண்டரா? மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!
சென்னை: ஆர்.என்.ரவி தன்னை ஆளுநர் என்பதை மறந்து பாஜகவின் அடிமட்டத் தொண்டரைப் போல பேசிக் கொண்டிருப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்ற ஆளுநரின் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு
கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் தன்னை ஆளுநர் என்பதை மறந்து பாஜகவின் அடிமட்டத் தொண்டரைப் போல பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பேச்சு பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் பேசப்பட்டிருக்க வேண்டியது. ஆளுநர் மாளிகையில் அல்ல.

பதவிக்கு இழுக்கு
அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்து கொண்டு தீவிர சார்பு அரசியல் பேசி கண்ணியமிக்கப் பதவிக்கு இழுக்கை தேடி தந்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர் என் ரவி. தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்துக்கு சூட்டப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த உயிர்த் தியாகம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் முக்கிய இடம் உண்டு.

பெயர் வரலாறு
மெட்ராஸ் மாகாணம் என்பது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணம் என்றே தமிழ்நாடு அழைக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதற்காக1956-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி சங்கரலிங்கனார் உண்ணாநிலை அறப்போராட்டத்தை விருதுநகரில் நடத்தினர்.76 நாள்கள் தொடர்ந்து நடத்தியதால் அவரது உயிர் பிரிந்தது.தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

அண்ணா ஆட்சியில்
அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக ஒருவர் உயிர்த் தியாகமே செய்திருக்கிறார். பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அப்போதுகூட, தமிழகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லை.

கடும் கண்டனம்
பா.ஜ.க வின் பிரித்தாலும் சூழ்ச்சியை ஆளுநர் அவர்கள் முன்னெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது . தனது ஆரிய சார்பு கருத்துகளைப் பரப்பும் விதமாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல. தொடர்ந்து திராவிட இயக்க கருத்தியலை எதிர்த்து வரும் தமிழக ஆளுநருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications