மீனவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்.. திடீர் கோரிக்கை வைத்த கமல்ஹாசன்.. தொடரும் போராட்டம்
சென்னை : தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது.
இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது.

இலங்கை அரசு
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்தும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 105 படங்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாகவும், இந்திய அரசின் சொத்தாகவும் மீனவர்களின் படகுகள் உள்ள நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

மத்திய அரசுக்கு கடிதம்
இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது போல மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும், இலங்கை சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவித்து அவர்களது படகுகளை மீட்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதி வருகின்றனர்.

மீனவர்கள் போராட்டம்
மேலும் இலங்கை அரசு மற்றும் கடற்படையை கண்டித்து ராமேசுவரம் ரயில் நிலையம் முன்பாக மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், மீனவர்களுக்கு நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கமலஹாசன் கோரிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications