இந்த எண்களில் சிவசங்கர் பாபா மீது புகாரளிக்கலாம்.. தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.. போலீசார் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் அளிக்க தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ள சிபிசிஐடி, புகார் தருவோரின் விவரங்கள் ரகசியமாகக் வைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

Recommended Video

    Sivasankara Baba-வை CBCID கைது செய்தது எப்படி ? பரபரப்பு பின்னணி

    தமிழ்நாட்டில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தொடங்கி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பலரைத் தமிழ்நாடு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    சில வாரங்களுக்கு முன் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக அவரது பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் புகார் அளித்தனர்.

     சிவசங்கர் பாபா

    சிவசங்கர் பாபா

    இதையடுத்து அவர் மீதான விசாரணையை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் 18 வயதுக்குப்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாகப் புகார் பெறப்பட்டதால், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. சென்னை கேளம்பாக்கம் அருகே ராமராஜ்ஜியம் பகுதியில் சுஷில் ஹரி என்ற பள்ளியை நடத்தி வரும் இவர், திடீரென மாயமானார்.

     தப்பியோட்டம்

    தப்பியோட்டம்

    இந்தச் சூழலில் சிவசங்கர் பாபா உத்தரகண்ட் டேராடூனில் ஒரு மருத்துவமனையில் இருப்பதாகத் தகவல் வெளியானது. சிபிசிஐடி போலீசார் அங்குச் செல்வதற்குள், சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் நோட்டீஸ் போலீசார் அளித்திருந்தனர். மேலும், அவரை தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.

     சிறையில் அடைப்பு

    சிறையில் அடைப்பு

    மொட்டை தலை, மஞ்சள் சட்டை, காவி வேட்டியில் சுற்றித் திரிந்த அவரை டெல்லி- உத்தரப்பிரதேசம் எல்லையில் காசியாபாத்தில் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று காலை அவரை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுதனர். அவரை வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

     மொபைல் எண்கள் அறிவிப்பு

    மொபைல் எண்கள் அறிவிப்பு

    இந்நிலையில் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் அளிக்கத் தொலைப்பேசி எண்களை சிபிசிஐடி அறிவித்துள்ளது. புலன் விசாரணை அதிகாரி - 98405 58992, ஆய்வாளர் - 98406 69982 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், [email protected] என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தருவோரின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி உறுதி அளித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+