மோகன் சர்மா 80 வயதில் முதியோர் இல்லத்தில்? புரட்டிப்போட்ட வயோதிகம்.. யார் இந்த லெஜண்ட் தெரியுமா?
சென்னை: மோகன் சர்மா - தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.. வெள்ளித்திரையில் பல வெற்றிப் படங்களிலும், சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.. தற்சமயம் இவரை பற்றி கசிந்து வரும் தகவல்களை கேட்டு, ஒட்டுமொத்த கலையுலகமே அதிர்ச்சியில் உள்ளது.
புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (FTII) நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் மோகன் சர்மா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்ததோடு திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். பார்த்திபன் கனவு, அப்பு, சச்சின், சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்..

யார் இந்த நடிகர் மோகன் ஷர்மா
தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளைப் பெற்றவர்... ஃபிலிம் சேம்பர் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான மோகன் சர்மா, இப்போது தன்னுடைய 80-வது வயதில் சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, மோகன் சர்மா பற்றி மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறும்போது, "மோகன் ஷர்மாவுக்கு அப்போது திருமணம் நடக்கவில்லை. லட்சுமி அவரை விரும்பினார். ஒருநாள் ஒரு நாய்க்குட்டியை வாங்கிக் கொண்டு, திருவனந்தபுரத்திலுள்ள மோகன்ஷர்மா வீட்டிற்கு சென்றார்.
லட்சுமியை பிரிந்தார்
'இந்த நாய்க்குட்டி போல உங்களையே சுற்றி சுற்றி வருவேன், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று மோகன்ஷர்மாவிடம், கூறியிருக்கிறார். இதைக்கேட்ட திருமணமாகாத மோகன் சர்மாவும், குங்குமத்தை எடுத்து, லட்சுமியின் நெற்றியில் வைத்து அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த ஜோடியை கேரளா திரையுலகமே வாழ்த்தியது. ஆனால், மீண்டும் அவரை விவாகரத்து செய்துவிட்டு, சிவசந்திரனை 3வது திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.
2வது கணவர் மோகன் சர்மாவுடன் வசித்த காலத்தில், மகள் ஐஸ்வர்யாவுடனும் லட்சுமிக்கு சண்டை வந்தது. ஒரே வீட்டில் ஐஸ்வர்யா, மோகன் சர்மா, லட்சுமி இந்த 3 பேராலும் இருக்க முடியவில்லை. மோகன் ஷர்மா பிரிந்து சென்றதற்கும், ஐஸ்வர்யா பிரிந்து செல்வதற்கும் இதுதான் காரணம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது." என்றெல்லாம் கூறியிருந்தார்.
வீடு விற்பனை தகராறு
சமீபத்தில்கூட இவரை பற்றின ஒரு செய்தி மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.. தி.நகரில் காரில் மோகன் சர்மா சென்று கொண்டிருந்தபோது, அவரை திடீரென வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவர் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியது.. இதில் காயமடைந்த மோகன் சர்மா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் விசாரணை நடத்தியதில், வீடு விற்பனை தொடர்பான தரகர் பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்ற தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
ஆனால், திரையுலகில் பல சாதனைகளைப் படைத்தவர், முதியோர் இல்லத்தில் தற்போது வசித்து வருவததாக கூறப்படுவது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மருந்து மாத்திரை
ஆனால் ஒரு பிரபல சேனலுக்கு மோகன் ஷர்மா தந்துள்ள பேட்டியில், "நான் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு யார் மீதும் எந்தக் குறையும் இல்லை.. வயது மூப்பு, தளர்ச்சி காரணமாகவே மன அமைதிக்காக தானாக முன்வந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள இந்த ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்.
என் தனிப்பட்ட தேவைகளையும் மருத்துவ உதவிகளையும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் நல விரும்பிகளே கவனித்து கொள்கிறார்கள்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
திரையுலகில் கொடிகட்டிப் பறந்து புகழின் உச்சத்தைத் தொட்ட ஒரு மூத்த கலைஞருக்கு வயோதிகக் காலத்தில் இப்படி ஒரு பரிதாப நிலைமையா? வாழ்க்கை புரட்டிப்போட்டதால் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்து, தற்போது தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பது நெஞ்சைப் பிழியும் சோகமாகும்!!!


Click it and Unblock the Notifications
