சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்கால அரசியலில் முக்கியமான தலைவர்.. கமல், தினகரனை முந்திய சீமான்.. விகடன் சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்கால தமிழக அரசியலில் இவர்களில் யார் முக்கியமான தலைவராக இருப்பார்கள் என்று ஜூனியர் விகடன் தனது கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பி இருந்தது. இதில் ஸ்டாலினே முதலிடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை எடப்பாடி பழனிசாமி பிடித்துள்ளார். கமல் மற்றும் டிடிவி தினகரனை முந்தி மூன்றாவது இடத்தை சீமான் பிடித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி 163 இடங்களில் வெல்லும், திமுக 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் 19 இடங்களிலும், மதிமுக 5 இடங்களிலும், சிபிஐ 4 இடங்களிலும், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் தலா 2 இடங்களிலும், கொமதேக, தவாக,பார்வார்டு பிளாக், மமக ஆகியவை தலா ஒரு இடத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி மொத்தம் 52 இடங்களில் வெல்லும் என்றும் அதிமுக 48 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், தமாகா மற்றும் புரட்சி பாரதம் ஆகியவை ஒரு இடத்தில் வெல்லும் என்றும் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் இக்கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 இழுபறி

18 இழுபறி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மட்டும் 1 இடத்தில் வெல்லும்; தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பில்லையாம் என்றும் சொல்கிறது கருத்துக்கணிப்பு. மேலும் 18 தொகுதிகளில் இழுபறி நிலைமை நீடிப்பதாகவும் கடைசி நேர யுக்திகளால் சில தொகுதிகளில் நிலைமை மாற வாய்ப்பு உள்ளது என ஜூனியர் விகடன் தனது கணிப்பில் கூறியுள்ளது.

எடப்பாடி 2வது இடம்

எடப்பாடி 2வது இடம்

எதிர்கால தமிழக அரசியலில் இவர்களில் யார் முக்கியமான தலைவராக இருப்பார்கள் என்று ஜூனியர் விகடன் தனது கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பி இருந்தது. இந்த கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என 43.21% பேர் கூறியுள்ளனர். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பளாரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 29.20% ஆதரவுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

3வது இடம்

3வது இடம்

எதிர்கால தமிழக அரசியலில் இவர்களில் யார் முக்கியமான தலைவராக சீமான் இருப்பார் என் 8.18 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கமல்ஹாசன், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ்,ஓபிஎஸ்,எல்முருகனை ஆகியோரை முந்தி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார் நாம் தமிழர் கடசியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அதிகம் பேர் ஆதரவு

அதிகம் பேர் ஆதரவு

சீமானுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் 7.01%; தினகரன் - 6.67% அன்புமணி ராமதாஸ் 1.46%; ஓபிஎஸ்- 0.99; எல். முருகன் 0.31%; ஆகியோர் முக்கியமான தலைவர்களாக இருப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா என்ற கேள்விக்கு ஆம் என 70.89% பேர் கூறியிருக்கிறார்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 45,09% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி 30.11% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
Junior Vikatan questioned who would be the most important leader in the future of Tamil Nadu politics. Stalin topped the list. Edappadi Palanisamy is in second place. Seeman is in third place ahead of Kamal and TTV Dhinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X