3வது கணவனுக்கு.. ராத்திரி 12 மணிக்கு வந்த டவுட்.. "நீ கற்புக்கரசியாக இருந்தால்".. மனைவியின் பகீர்
பெற்ற மகளை தீ வைத்து கொளுத்திய தாய் கைதாகி உள்ளார்
சென்னை: "நீ நிஜமாகவே கற்புக்கரசியாக இருந்தால், இந்த காரியத்தை செய்" என்று கணவன் உத்தரவிடவும், அதை அப்படியே வழிமொழிந்து செய்துவிட்டார் மனைவி..!
சென்னை திருவொற்றியூர் பத்மநாபா காலனியை சேர்ந்தவர் பத்மநாபன்..41 வயதாகிறது.. இவர் ஐஓசியில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டி வருகிறார்.
மனைவி பெயர் ஜெயலட்சுமி.. 38 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.. ஆனால், ஜெயலட்சுமிக்கு இது 2வது திருமணம்.

கருத்து வேறுபாடு
முதல் கணவர் பெயர் பால்வண்ணன்.. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.. இதனால் ஜெயலஷ்மி பால்வண்ணன் தம்பியான துரைராஜ் என்பவரை 2வதாக கல்யாணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு பவித்ரா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். பவித்ராவுக்கு 13 வயதாகிறது.. இதற்குள் 3வதாக பத்மநாபன் என்பரை திருமணம் செய்து கொண்டார் ஜெயலட்சுமி, இப்போது, பத்மநாபன், ஜெயலட்சுமி, பவித்ரா 3 பேருமே ஒன்றாக வசித்து வருகிறார்கள்..

கற்புக்கரசி
இப்படிப்பட்ட சூழலில்தான், 3வது கணவன் பத்மநாபனுக்கு ஜெயலட்சுமியின் நடத்தை மீது திடீரென சந்தேகம் வந்துவிட்டது.. அதுவும் நேற்று ராத்திரி 12 மணிக்கு சந்தேகம் வந்துள்ளது.. இது தொடர்பாக இருவருக்குள்ளும் சண்டையும் ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமுற்ற பத்மநாதன், ஜெயலட்சுமியிடம், "நீ நிஜமாகவே கற்புக்கரசியாக இருந்தால், பவித்ராவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்து" என்று சொல்லியுள்ளார்.

ஜெயலட்சுமி
தகராறில் கொந்தளித்து போயிருந்த ஜெயலட்சுமியும், தூங்கி கொண்டிருந்த பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டார்.. இதனால் அலறி துடித்துள்ளார் பவித்ரா.. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, பதறிபோய், இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் போலீசாரும் உடனடியாக வந்து பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்..

விசாரணை
அங்கேயும் சிக்கல் வரவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.. இவ்வளவும் நடந்து முடிப்பதற்குள் பவித்ராவுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு விட்டது.. இப்போது சீரியஸாக இருக்கிறாள் பவித்ரா.. கவலைக்கிடமான நிலையில் பவித்ரா சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.. முதல் வேலையாக, மகளை தீ வைத்து கொளுத்திய பெற்ற தாயையும், 3வதாக வாக்கப்பட்ட பத்மநாபனையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications