முத்ரா கடன் திட்டத்தில் அசத்தல்.. டெல்லியையே தூக்கி சாப்பிட்ட தமிழ்நாடு.. அசைக்க முடியாத 2-வது இடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்ரா யோஜனா கடன் திட்டத்தில் தமிழ்நாடு அசத்தல் சாதனை புரிந்துள்ளது.. மத்திய அரசால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் உயரிய நோக்கில் தொடங்கப்பட்ட 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ், நிதிப் பங்கீடு மற்றும் பயனாளிகள் தொடர்பான மிக முக்கியமான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக கடன்களை பெறுவதில், நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு வரலாற்று சிறப்புமிக்க 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அப்படியானால் முதல் மாநிலம் எது தெரியுமா?

தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி "பிரதம மந்திரி முத்ரா யோஜனா" என்ற திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

Mudra Loan Tamil Nadu Mudra Yojana

முத்ரா யோஜனா திட்டம்

எந்தவிதமான சொத்து அடமானமும் இல்லை, பிணையமும் தேவையில்லை... வெறும் கையோடு வாருங்கள், கடனை வாங்கி தொழில் தொடங்குங்கள் என்ற ரீதியில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது..

ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக இந்த நிதியை யார் யாரெல்லாம் பெற்று பலனடைந்துள்ளார்கள் தெரியுமா? 2015 முதல் 2026 ஜூன் வரையிலான முழுமையான பட்டியலை ஆய்வு செய்யப்பட்டு, அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அசத்தல்

அந்த லிஸ்ட்டில் இந்தியாவிலேயே மிக அதிக கடன் பெற்று பீகார் மாநிலம் முதலிடத்தை பிடித்து எல்லோரையும் மலைக்க வைத்துள்ளது.. பீகாரில் 4.78 கோடி பெண் தொழில் முனைவோருக்கு, ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 863 கோடியே 3 லட்சம் வரை வாரி வழங்கப்பட்டுள்ளது..

அதேபோல அனைத்து கணக்குகளையும் தலைகீழாக மாற்றி, தமிழ்நாட்டின் பெண்கள் படைத்த சாதனை ஒட்டுமொத்த நாட்டையும் வாயடைக்க வைத்திருக்கிறது! ஆமாம், பீகாருக்கு அடுத்தபடியாக, பிற அனைத்து முன்னணி மாநிலங்களையும் தூக்கி சாப்பிட்டு, தமிழ்நாடு அசைக்க முடியாத 2-வது இடத்தை கைப்பற்றியுள்ளது!

பெண்கள் முதலீடுகள்

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 4.33 கோடி பெண் தொழில் முனைவோர்கள் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்று, ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 537 கோடியே 79 லட்சம் என்ற தொகையை தங்கள் கைக்கு கொண்டு வந்துள்ளனர்! 3-வது இடத்தை மேற்கு வங்காளமும், 4-வது இடத்தை கர்நாடகாவும் பிடித்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டின் ஆதிக்கம் மிகவும் வலுவாக உள்ளது.

மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து இது தொர்பான ஒரு அறிக்கை வெளியாகி, பரபரப்பை கிளப்பியிருக்கிறது! யாரும் எதிர்பாராத வகையில், இந்திய அளவிலான அந்தப் பெரிய பட்டியலில் தமிழ்நாடு பிடித்துள்ள இடம், ஒட்டுமொத்த தென்னகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது..

எந்தவொரு பின்னணியும் இல்லாமல், சொந்தக் காலில் நிற்க துடிக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் இத்தனை லட்சம் கோடிகளை ஈட்டி, தங்கள் தொழிலில் முதலீடு செய்திருப்பது சோஷியல் மீடியாவில் பரவி, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+