மொஹரம் பண்டிகை: ஜூலை 7 இல் அரசு விடுமுறையா? - தமிழக அரசு விளக்கம்
சென்னை: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 ஆம் தேதியான வரும் திங்கள்கிழமை அன்று அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், விடுமுறையா இல்லையா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை மாதம் தொடங்கியதில் மொஹரம் பண்டிகை விடுமுறை குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மொஹரம் பண்டிகை ஜூலை 6 ஆம் தேதி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இந்த தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மொஹரம் பண்டிகை ஜூலை 6 ஆம் தேதியே என்றும், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 ஆம் தேதியான திங்கள்கிழமை அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: மொஹரமை முன்னிட்டு ஜூலை 7 ஆம் தேதியன்று அரசு விடுமுறை என்று பரவும் தகவல் வதந்தி.
மொஹரமை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவலாகும்.
"கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 ஆகும்." என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 07-07-2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை. எனவே தவறான தகவலை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications