தெலுங்கானா புலியை பார்த்து பயந்துட்டு.. தமிழகத்தில் முறத்தை வீசுவது வீரமோ? தமிழிசையை விடாத ‘சிலந்தி’
சென்னை : புலியை தெலுங்கானாவில் பார்த்து பயந்து ஓடி வந்து விட்டு தமிழ்நாட்டில் இன்று முறத்தை வீசுவது என்ன வீரமோ? ஆளுநர் திருமதி தமிழிசை தான் விளக்க வேண்டும் என முரசொலியின் சிலந்தி பதில்கள் பகுதியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மாநில ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளை தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படாததோடு அவர் செல்லும் இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் கூட செல்வதில்லை.
இந்த நிலையில் தான் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்களை சந்திப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தேசியக்கொடியை ஏற்றவும் குடியரசு தின உரை நிகழ்த்த கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியிருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முரசொலி
இதனை அடுத்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது ஆளுநர்கள் தங்கள் அரசியலமைப்பு வரம்புகளை மீறி செயல்படக்கூடாது எனவும் அவர்கள் அப்படி செயல்பட்டால் அதே வழியில் நடத்தப்படுவார்கள். மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களில் தலையிட முயன்றால் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஏற்பட்ட நிலை தான் மற்ற மாநில ஆளுநர்களுக்கும் ஏற்படும் என்றும் முரசொலி சிலந்தி பகுதியில் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக அனைத்து சுயமாக செயல்படும் ஆளுநர்களும் இதை விரைவில் உணர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்
முரசொலியில் வெளியாகி இருந்த இந்த கட்டுரை தமிழிசை சௌந்தரராஜனுக்கு மட்டுமல்லாது தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவிக்கும் தான் என சமூக வலைதளங்களை விவாதங்கள் நடந்தன. குறிப்பாக தமிழகத்தில் இந்தி திணிப்பு, இருமொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ரவி பேசுவர். இந்நிலையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

புலியை முறத்தால்..
இந்த கட்டுரை விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்," புலியை முறத்தால் அடித்து துரத்திய தமிழச்சி பாரம்பரிய இருந்து வந்தவள் நான்! இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தோ! அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்கு தெரியவில்லை எனக் கூறியிருந்தார். மேலும் நான் அலரவும் இல்லை அழுகவும் இல்லை என்னை மதித்தாலும் மதிக்கவில்லை என்றாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்தேன் எனக் கூறியிருந்தார் இந்த நிலையில் தமிழிசைக்கு பதில் அளிக்கும் வகையில் முரசொலி சிலந்தி பதில் வெளியிடப்பட்டுள்ளது.

அவமதிக்கப்படவும் இல்லை
கேள்வி பதில் வடிவில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,"
கேள்வி:- தமிழ்நாட்டிலிருந்து ஒரு கட்சியின் பத்திகையில் (முரசொலி) நான் அவமதிக்கப்பட்டதாக எழுதியுள்ளனர். நான் அவமதிக்கப்படவும் இல்லை. அறைவும் இல்லை என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளாரே?
சிலந்தி:- ஹைதராபாத்தில் அவர் அவமதிக்கப்பட்டதாக முரசொலி எழுதவில்லை! அவர் அப்படி கூறியதாக ஏடுகள், செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியது. அம்மையார் பேசியதாக ஏடுகளில் வெளிவந்த செய்திகள் முழுவதையும் முரசொலி எடுத்துக் காட்டவில்லை. "ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) மதிக்கப்படு வதில்லை.. பல விவகாரங்கள் குறித்து விவரங்கள் கேட்டால். அரசாங்கம் பதிலளிப்பதில்லை. ராஜ்பவன் தீண்டத்தகாத இடமாக மாறிவிட்டது" என்று அந்த நிகழ்ச்சியில் பேசியதாக 'தி இந்து' ஏடு குறிப்பிட்டிருந்தது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஆளுநர் மாளிகையில் தான் நடத்திய போது, தெலுங்கானா முதலமைச்சர் மட்டுமல்ல: ஒரு மாவட்ட கலெக்டர் கூட அந்த விழாவுக்கு வரவில்லை; எனக்கு மதிப்புதராவிடினும் பரவாயில்லை; ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற அளவில் அந்தப் பதவிக்காவது மரியாதை தந்திருக்க வேண்டாமா? - என்று திருமதி தமிழிசை கேட்டதாக அதே 'தி இந்து ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது!

ஆளுநர் மறுக்கிறாரா?
இதனைத்தான் ஆளுநர், தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை சுட்டிக்காட்டி, அங்கலாய்த்துள்ளார் என முரசொலி எழுதியது! இவை எல்லாம் அவமதிப்பல்ல; என்று ஆளுநர் கூற இயலாது. தான் அவமதிக் கப்பட்டதாக, அதாவது ஆங்கிலத்தில் Humiliated என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசியதையும் ஆளுநர் மறுக்கிறாரா? அந்தப் பேச்சு 'யூ டியூப்' செய்தியில் அப்படியே இருக்கிறது. ஒருவேளை ஆளுநர் தமிழிசைக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே?

பதவி உயர்பதவி
அம்மையார் எண்ணுவது போல அந்தப் பதவி உயர்பதவியாக இருக்கலாம்; ஆனால் அது நியமனப்பதவி. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, சில ஆளுநர்கள் விபரம் தெரியாமல் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசியல் சட்டம் இயற்றிய மேதைகள் "பல்லை" புடுங்கி வைத்துள்ளனர். பல் போன பொக்கை வாயைக் கொண்டு, கடித்துக் குதறிவிடுவேன் என்று மிரட்டினால், முடிவில் என்ன கதி ஏற்படும் என்பதைத்தான் தெலுங்கானா நிகழ்வுகள் விளக்கியுள்ளன! அதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு அப்பிராணி
கேள்வி:-இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால், அதை எப்படி தமிழ்நாட்டிலிருந்து மகிழ்வாக ஏற்க முடியும்? - என்று அதே பேட்டியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கேட்டுள்ளாரே?
சிலந்தி:- இப்படி எல்லாம் பேட்டி தருவதாறும், பேசுவதாலும்தான் நாம் அவரை ஒரு அப்பிராணி என எழுதிக்காட்டியிருந்தோம்! சென்ற இடத்தில் பிறந்த இடத்துக்கு நல்ல பெயர் வாங்கி வந்திருந்தால் சகோதரியை உச்சிமோந்து கொண்டாடுவதும், சென்ற இடத்தில் சண்டை போட்டு, ஏட்டிக்குப் போட்டியாக தாறுமாறாக நடந்து கொள்பவரைக் கண்டித்து புத்திமதி கூறுவதும் தமிழ்நாட்டுப் பண்பாடுதானே!. தமிழ்ப் பண்பாடு குறித்து தமிழிசை அவர்கள், தனது தந்தையிடம் முற்றிலும் கற்கவில்லையோ என்ற ஐயம்தான் நமக்கு அவர் கேள்வியிலிருந்து எழுகிறது!

தெலுங்கானா புலி
கேள்வி:- புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி பரம்பரையில் வந்தவள்நான், என திருமத்தமிழிசை வீராவேசமாகப் பேட்டி தந்துள்ளாரே?
சிலந்தி:- புலியை தெலுங்கானாவில் பார்த்து பயந்து ஓடி வந்துவிட்டு, தமிழ்நாட்டில் நின்று முறத்தை வீசுவதில் என்ன வீரமோ? ஆளுநர் திருமதி. தமிழிசைதான் விளக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications